30-வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிங்களா? அப்ப இதக் கண்டிப்பா படிங்க..!!

Read Time:3 Minute, 55 Second

00-13-1499935005-400x300பெண்கள் கருவுற எது சரியான வயது என்ற விவாதங்கள் நிறைய எழுந்தன. ஆனால் ஆண்களுக்கு எந்த வயதில் கருவுறும் திறன் இருக்கும் என்பதையும் அறிந்திருக்க வேண்டியது அவசியம்.

வயதாக வயதாக பெண்களுக்கு கருவுறும் திறன் குறைவது போல தான் ஆண்களுக்கும் வயதாகும் போது கருவுறுதல் திறன் குறைகிறது.

ஒரு ஆராய்ச்சியில் 40 வயதிற்கு மேல் உள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் கால தாமதமாக தான் கருவுறுகிறார்கள் என தெரியவந்துள்ளது. ஆனால் 25 வயதுள்ள ஆண்களை திருமணம் செய்யும் பெண்கள் எளிதில் கர்ப்பமடைந்துவிடுகிறார்களாம். இது பற்றி சில உண்மைகளை இந்த பகுதியில் காணலாம்.

டெஸ்ரோன் அளவுகள் ஆண் தனது 30 வயதிற்கு பின்னர் ஒவ்வொரு ஆண்டும் 1% டெஸ்டோஸ்டிரோன் அளவு குறைகிறது. அதுமட்டுமின்றி விந்தணுக்களின் உற்பத்தியும் முப்பது வயதிற்கு மேல் குறைகிறது.

விந்தணுக்களின் தரம் விந்தணுக்களின் தரத்தை பற்றி சிந்திக்கும் போது 35 வயதிற்கு மேல் விந்தணுக்களின் தரம் குறைய தொடங்குகிறது. முதுமை விந்து இயக்கத்தையும் குறைக்கிறது.

விந்தணுக்களின் இயக்கம் விந்தணுக்களின் தரம், மற்றும் இயக்கம் 25 வயதிற்கு முன்னால் மிகச்சிறப்பாக இருக்கும். இதன் தரம் மற்றும் இயக்கம் 55 வயதிற்கு பின்னர் மிகக்குறைவாகிவிடும். இந்த நேரத்தில் ஆண் தனது கருவுறுதல் திறனை 50% வரை இழக்கக்கூடும்.

வாழ்க்கை முறை ஆண் கருவுறுதல் வயதை பொருத்து அமைந்தாலும், அது வாழ்க்கை முறையை பொருத்தும் அமையும். புகைப்பிடித்தல், ஊட்டச்சத்தின்மை, இறுக்கமான உடைகளை அணிவது, தூக்கமின்மை போன்ற சில பிரச்சனைகளும் ஆண்கள் கருவுறாமைக்கு காரணமாக அமைகிறது.

எது சரியான வயது? அப்படி என்றால், ஆண்கள் தந்தையாக எது தான் சரியான வயது என கேட்கிறீர்கள் சரிதானே? 22 வயது முதல் 25 வயது வரை இருக்கும் காலம் ஆண்கள் திருமணம் செய்து கொள்ள சரியான காலமாகும். ஆனால் இந்த வயதில் ஆண்கள் வாழ்க்கையில் செட்டிலாகி இருக்கமாட்டார்கள். எனவே 28 முதல் 30 வயதிற்குள் திருமணம் செய்து கொள்வது சரியானதாக இருக்கும். ஆனால் 30 வயதில் உங்களது விந்தணுக்களின் இயக்கம் குறைய ஆரம்பித்துவிடும்.

டீன் ஏஜ்? ஆணின் 15 முதல் 19 வயதில் தான் விந்தணுக்களின் வளர்ச்சி ஆரம்பிக்கும். எனவே இந்த வயது ஒரு ஆண் குழந்தை பெற நிச்சயம் சிறந்த வயதாக இருக்க முடியாது.

டின்ஏ பாதிப்பு ஆண்கள் 30 வயதிற்கு மேல் வரும் ஒவ்வொரு ஆண்டும் தங்களது கருவுறும் திறனை 1% இழக்கிறார்கள் என பார்த்திருந்தோம். அதுமட்டுமின்றி ஆண்களின் 35-ஆவது வயதில் அவர்களின் டி.என்.ஏக்கள் பாதிப்படைய தொடங்குகிறது. இதனால் ஆண்கள் தங்களது 30 வயதிற்குள் தந்தையாக திட்டமிடுதல் அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலுக்கு இடையூறாக இருந்த தோழி: கொன்று புதைத்த பயங்கரம்..!!
Next post முகம் உடனடியாக ஜொலிக்க வேண்டுமா? பீட்ரூட் ஃபேஸியல் ட்ரை பண்ணுங்க..!!