முகம் உடனடியாக ஜொலிக்க வேண்டுமா? பீட்ரூட் ஃபேஸியல் ட்ரை பண்ணுங்க..!!

Read Time:2 Minute, 49 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)பீட்ரூட் ஆரோக்கியமான காய்கறி. குடலை சுத்தம் செய்யும். ரத்த அணுக்களை அதிகரிக்கச் செய்யும். ரத்தத்தை சுத்தம் செய்யும். அதிக ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. பீட்ரூட் அழகிற்கும் உபயோகபப்டுகிறது. இது முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமம் புதிதாக சுவாசிக்கும்.

பெரிய துவாரங்களை சுருக்குவதால் அழுக்குகள் தங்கி சரும பிரச்சனைகளை உண்டாக்காது. அதோடு. சருமத்திற்கு சிவப்பு நிறத்தை அளிக்கிறது. அதனை உபயோகித்து எவ்வாறு உங்கள் அழகி அதிகரிக்கச் செய்யலாம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

உடனடி ஜொலிப்பிற்கு :

2 டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 15 நிமிடம் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

சிவப்பு நிறமளிக்க :

கடலை மாவு = 1 ஸ்பூன்

பீட்ரூட் சாறு – 1 ஸ்பூன்

யோகார்ட் – 1 ஸ்பூன்

ரோஜா இதழ் – ஸ்பூன்

ரோஜா இதழை அரைத்து மற்ற எல்லா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்தில் தடவவும்.

காய்ந்ததும் கழுவுங்கள்.

முகம் நிறம் பெறும்.

கன்னங்கள் சிவப்பாக :

முல்தானி மட்டி சிறிது எடுத்து அதில் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக இறுகியதும் கழுவுங்கள். இதனால் கன்னம் சிவந்த நிறம் பெறும்.

கருவளையம் நீங்க :

பீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள் . காய்ந்ததும் கழுவினால் நாள்டைவில் கருவளையம் மறைந்துவிடும்.

உதடு சிவப்பு பெற :

பீட்ரூட் சாறில் சிறிது தேங்காய் எண்ணெய் கலந்து ஃபீரீஸரில் வைத்துவிடுங்கள். இரவில் அதனை எடுத்து உதட்டில் தடவிவ்ட்டு செல்லுங்கள். ஒரே வாரத்தில் உதட்டு கருமை மறைந்து சிவப்பு நிறம் பெறும்

டோனராக :

பீட்ரூட் சாறில் சம அளவு முட்டை கோஸ் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து 10 நிமிடன் கழித்து கழுவுங்கள். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 30-வயசுக்கு மேல கல்யாணம் பண்ணிக்கலாம்னு இருக்கிங்களா? அப்ப இதக் கண்டிப்பா படிங்க..!!
Next post இவர்தான் உண்மையான வீரப்பெண்..!! (வீடியோ)