நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் துரியன் பழம்..!!

Read Time:4 Minute, 2 Second

201707190838323180_durian-fruit-that-increases-immunity_SECVPFநமது உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும், நேரடியாக பழங்களில் இருந்து கிடைக்கின்றன. பழங்கள், உடலின் ஜீரண உறுப்புக்களை பலப்படுத்தி, எலும்புகளுக்கு பலம் சேர்க்கின்றன. ரத்தத்தை சுத்தப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

பொதுவாக, பழங்களை சாறாக குடிப்பதை விட, நன்றாக மென்று சாப்பிடுவது சிறந்தது. இதில், துரியன் பழம் அதிக மருத்துவத்தன்மை கொண்டது. நறுமண வாசனையுடன் கூடிய துரியன் பழம், இனிப்புச் சுவை உடையது. பழம் மட்டுமின்றி, இதன் இலைகளும், பல மருத்துவப் பண்புகளை கொண்டுள்ளன. மது, புகை, போதை போன்ற தீய பழக்கங்களால், உடல் வலுவிழந்தவர்களுக்கு இந்த பழம், நல்ல மருந்து.

இவர்கள், வாரம் இருமுறை, துரியன் பழம் சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் வலுவடையும். கொழுப்பு சத்தை கரைத்து, கலோரிகளாக மாற்றி, ரத்தத்தை சுத்தப்படுத்தி, இதயம் சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ளலாம். எரிச்சல், கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், போதிய உடற்பயிற்சியின்மை ஆகியவற்றால், நரம்புகள் எளிதில் பலவீனமடைகின்றன. இந்த குறையை போக்க, துரியன் பழம் பயன்படுகிறது.

மலச்சிக்கலை நீக்கும் குணம் இந்த பழத்துக்கு உண்டு. செரிமான சக்தியை தூண்டி, நன்கு பசியை ஏற்படுத்தும். விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வல்லது. இந்த பழத்தில் கால்சியம், மாங்கனீசு, கரோட்டின், கொழுப்பு, இரும்புச்சத்து, ரிபோப்ளேவின், கார்போஹைட்ரேட், தாமிரம், போலிக் ஆசிட், வைட்டமின் சி, நார்ச்சத்து, துத்தநாகம், நியாசின், புரதம், பாஸ்பரஸ், பொட்டாசியம், மக்னீசியம் உள்பட பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் வாழைப்பழத்தை விட, 10 மடங்கு அதிகமான இரும்புச்சத்து, பாஸ்பரஸ் இந்த பழத்தில் நிறைந்துள்ளன.

வைட்டமின்கள் பி, பொட்டாசியம், கால்சியம் ஆகியவை, மூட்டுகளையும், எலும்புகளையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவி செய்கின்றன. நகங்களில் பிரச்சினை இருக்கும் போது, இந்த பழத்தின் வேர்களை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும். மாங்கனீசு அதிகம் இருப்பதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக வைக்க உதவும். இரும்பு, போலிக் ஆசிட் அதிக அளவு இருப்பதால் ரத்தச் சோகையை குணமாக்கலாம்.

இளமையிலேயே முதுமைத் தோற்றத்தில் காணப்படுபவர்கள், துரியன் பழத்தை சாப்பிட்டு வந்தால், அதிலுள்ள வைட்டமின் சி சத்தால், முதுமைத் தோற்றத்தை தடுக்கலாம். மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு துரியன் பழம் மிகவும் சிறந்தது. ஏனெனில், இதில் பைரிடாக்ஸின் எனும் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இந்த பழத்தை சாப்பிட்டு வந்தால், தைராய்டு சுரப்பி சீராக இயங்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காஜல் – அக்‌ஷராஹாசன் இடையே மோதலா?..!!
Next post எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க : மார்பகங்களில் வெள்ளை பெயிண்ட் அடித்த மாடல் அழகி! எதற்கு தெரியுமா?..!!