காதலியை கழுத்து அறுத்து கொன்றுவிட்டு தற்கொலைக்கு முயன்ற வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 14 Second

201707181641294938_19yearold-kills-girlfriend-attempts-suicide_SECVPFராஜஸ்தான் மாநிலம் தௌசா மாவட்டத்தின் காயத்ரி நகரைச் சேர்ந்தவர் திலிப் மீனா. இவர் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை காதலித்து வந்துள்ளார். அவர்களுக்கு இடையே ஏதோ பிரச்சனை இருந்ததாக தெரிகிறது.

நேற்று அச்சிறுமி திலிப் வீட்டின் வழியாக சென்ற போது அவரின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆனால் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவரை காப்பாற்றினர்.

சிறுமியின் கொலை குறித்து உறவினர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அந்த இளைஞர் மீது குழந்தைகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து திலீப் கைது செய்யப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்ணிடம் தவறாக நடந்தால் இதுதான் கதி..!! (வீடியோ)
Next post நடிப்பில் நிறைய கற்றுக்கொண்டேன்: ஷிவதா நாயர்..!!