பெண்களை சந்தை போட்டு விற்கும் நாடு! ஆண்கள் பணம் கொடுத்து வாங்கிக்கொள்ளலாம்..!!

Read Time:4 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90உலகில் பல சந்தைகள் உள்ளன. காய்கறி, பழங்கள் வாங்கும் சந்தை, பலான விஷயத்திற்கான சந்தைகள், ஆயுதங்கள், போதை பொருட்கள் வாங்க அண்டர்வோர்ல்ட் சந்தைகள்.

ஆனால், நீங்கள் எங்கேனும், மணப்பெண்ணை வாங்கும் சந்தையை கேள்விப்பட்டதுண்டா? இல்லை என்றால் இங்கே வாங்க. பல்கேரியாவில் மணப்பெண் வாங்கும் சந்தை ஒன்று இருக்கிறது. அங்கே பெண்கள் மணப்பெண் போல உடை அணிந்து வர, மணமகன் வீட்டார் தங்களுக்கு பிடித்த பெண்ணை பேரம் பேசி வாங்கி / அழைத்து செல்கிறார்கள்.

இந்த சந்தை பல்கேரியாவின் ஸ்டாரா ஜாகோர் எனும் இடத்தில் இயங்கி வருகிறது. இங்கே பெண்கள் தங்களை மணப்பெண் போல அலங்கரித்துக் கொண்டு, உடை அணிந்து வருகிறார்கள்.

இதனால் மணமகன்கள் ஈர்க்க செய்கிறார்கள். எல்லா வயதிலான பெண்களும் இந்த சந்தைக்கு வருகிறார்கள் எனிலும், பதின் வயது பெண்கள் தான் அதிக விலைக்கு வாங்கப்படுகிறார்கள்.

மணமகன் முதலில் தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்வார். பிறகு அந்த பெண்ணுடன் பேச சிறிது அவகாசம் அளிக்கப்படும். பெண்ணுக்கு பிடித்திருந்தால் அந்த ஆணை ஏற்றுக் கொள்வார். பிறகு பேசிய பணம் அந்த பெண் வீட்டாருக்கு அளிக்கப்படும்.

இந்த சந்தையில் அதிகமானோர் பதின் வயது பெண்களை தேர்வு செய்ய காரணம். அவர்கள் கற்புடன் இருப்பார்கள் என கருதுவதால் தான். இந்த காரணத்தால் தான் கடந்த சில வருடங்களாக பல பதின் வயது பெண்கள் அதிக விலைக்கு வாங்கப்படுகிறார்களாம்.

இரண்டு லட்சத்தில் இருந்து ஐந்து லட்சம் வரை கொடுத்து பதின் வயது பெண்களை இந்த சந்தையில் இருந்து வாங்குகிறார்கள். பல மணமகன்கள் ஒரே பெண்ணை விரும்பினால் பிறகு அந்த பெண்ணின் விலை தானாக அதிகரிக்க ஆரம்பிக்கும். ஏறத்தாழ ஏலம்விடுவது போல.

இது போல ஒரு சந்தை தான் இருக்கிறது என்றால் இல்லை. அங்கே இருக்கும் பல ஏழை குடும்பங்கள் இது போல ஆங்காங்கே சந்தை போட்டு பெண்களை மணப்பெண்ணாக விற்கிறார்கள்.

இதற்கு தடை ஏதும் இல்லை. கோடை அல்லது குளிர் காலங்களில் இந்த சந்தைகள் நடைப்பெறுகின்றன. முதலில் மணப்பெண், அங்கே அமைக்கப்பட்ட மேடையில் நடனம் ஆடுவார்.

அந்த மேடையை சுற்றிலும் பல மணமகன்கள் இருப்பார்கள். பிறகு அதில் யாராவது அந்த பெண்ணை தேர்வு செய்வார்கள். இப்படி தான் இந்த மணப்பெண் விற்பனை துவங்குகிறது.

இந்த மணப்பெண் சந்தை ஆர்டிச்டன் என்ற பல்கேரியாவை சேர்ந்த ஒரு பிரிவினர் மட்டுமே நடத்துகிறார்கள். இவர்களை தவிர வேறு யாரும் இப்படி செய்வது இல்லை என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் பொருளாதார ரீதியாக மிகவும் பின்தங்கியுள்ளதால் இப்படி செய்கிறார்கள். இந்த சந்தைக்கு பெண்கள் தனியாக வரக் கூடாது. உடன் குடும்பத்தை சேர்ந்த நபர்கள் இருக்க வேண்டும். இங்கே மணமகன் தான் டவுரி எடுத்து வருவார். பெண் குடும்பத்தாருக்கு ஆண் குடும்பம் டவுரி கொடுக்கும்.

ஆண் விரும்பினாலும், அந்த ஆணை அந்த பெண் விரும்ப வேண்டும். இல்லையேல் விற்கப்பட மாட்டார். இப்படி பல ஸ்ட்ரிக்ட் விதிமுறைகள் இங்கே கடைப்பிடிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 2-வது ஆட்டத்தை துவக்கிய சரத்குமார்..!!
Next post மக்ரோனி – பாலாடைக்கட்டி உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும்: புதிய ஆய்வில் தகவல்..!!