ஆனந்தி ராசியான வெற்றி பட நாயகி: கிருஷ்ணா..!!

Read Time:1 Minute, 59 Second

201707171722592938_Ananthi-is-a-winning-heroine-says-Krishna_SECVPFகிருஷ்ணா- கயல் ஆனந்தி ஜோடி சேர்ந்து நடித்து திரைக்கு வந்துள்ள படம் ‘பண்டிகை’. இதுபற்றி கூறிய கிருஷ்ணா…

“ ‘கழுகு’, ‘யாமிருக்க பயமேன்’ போன்ற படங்கள் வெளிவருவதற்கு முன்பு எனக்கு என்ன உணர்வை தந்ததோ, அதே உணர்வை ‘பண்டிகை’ படமும் தருகிறது. இயக்குனர் பெரோஸ் எனக்கு நீண்ட கால நண்பர். சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவான இந்த கதை என் திரைஉலக வாழ்வில் முக்கிய படமாக இருக்கும். அன்பு, அறிவு என்ற இரட்டையர் அமைத்து உள்ள சண்டை காட்சிகள் எனக்கு ஆக்‌ஷன் ஹீரோ அந்தஸ்தை தரும்.

இந்தப் படத்தில் எனக்கு ஜோடியாக நடித்துள்ள ஆனந்தி ஒரு ராசியான வெற்றி பட நாயகி. ‘பண்டிகை’ மேலும் ஒரு வெற்றியை அவருக்கு தரும். சரவணன் இந்த படத்துக்கு பிறகு தமிழ் திரை உலகில் குணசித்திர நடிகர்களுக்கு இருக்கும் பஞ்சத்தை தீர்ப்பார். அவரை போலவே நிதின் சத்யாவும், தனக்கென ஒரு இடத்தை பிடிப்பார். இசையமைப்பாளர் ஆர்.எச். விக்ரம் பாடல்களிலும், பின்னணி இசையிலும் தனது திறமையை காட்டி இருக்கிறார்.

இதன் தயாரிப்பாளர் விஜயலட்சுமி என்னுடைய நெருங்கிய தோழி. தயாரிப்பாளர் என்ற ஸ்தானத்தையும் கடந்து அவர் இந்தப் படத்துக்காக எடுத்துக் கொண்ட அக்கறை, அவரது வெற்றிக்கு கட்டியம் கூறுகிறது. எங்கள் அனைவரது உழைப்பும் ‘பண்டிகை’ படத்தின் வெற்றி மூலம் கொண்டாடப்படும் என்பது நிச்சயம்” என்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிக்பாஸ் நட்சத்திரங்களின் செயல்… கிழித்து தொங்க விட்ட அமெரிக்க தமிழச்சி..!! (வீடியோ)
Next post கூடுவிட்டு கூடு பாய்ந்து இளம்பெண்ணின் நடத்தைகளை கூறும் சித்தர்..!! வீடியோ