தலைமறைவான காவ்யா மாதவனை தேடும் போலீஸ்..!!

Read Time:2 Minute, 40 Second

201707131224481318_police-search-disappeared-actress-kavya-madhavan_SECVPFகாவ்யா மாதவன் 15 வருடங்களாக சினிமாவில் இருக்கிறார். மலையாள பட உலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். காசி, என்மன வானில், சாதுமிரண்டா ஆகிய தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். காவ்யா மாதவனுக்கும், நிஷால் சந்திரா என்பவருக்கும் கடந்த 2009-ம் ஆண்டில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின் காவ்யா மாதவன் கணவருடன் குவைத்தில் குடியேறினார்.

ஒரு வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர் கேரளா திரும்பினார். இருவரும் விவாகரத்தும் செய்து கொண்டனர். பின்னர் திலீப்பை காவ்யா மாதவன் கடந்த வருடம் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். மீண்டும் சினிமாவில் நடித்து வந்தார். தற்போது பாவனா கடத்தல் வழக்கில் திலீப்புடன் காவ்யா மாதவனும் சிக்கி இருக்கிறார்.

பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து எடுத்த வீடியோவை காவ்யா மாதவனின் கடை ஊழியரிடம் கொடுத்து விட்டதாக இந்த வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் பல்சர் சுனில் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்து இருக்கிறார். காவ்யா மாதவன் கடையில் இருந்து ரூ.2 லட்சம் வாங்கியதாகவும் கூறி இருக்கிறார். இந்த வாக்குமூலம் காவ்யா மாதவனை வழக்கில் சிக்க வைத்து இருக்கிறது.

கடத்தலுக்கும், அவருக்கும் தொடர்பு இருக்கிறதா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். கடை ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு உள்ளது. அடுத்தகட்டமாக காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.

இந்த நிலையில் காவ்யா மாதவன் தலைமறைவாகி விட்டதாக தகவல் பரவி உள்ளது. வீட்டை விட்டு வெளியேறி தோழி வீட்டில் பதுங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. தனது ‘பேஸ்புக்’ பக்கத்தையும் அவர் மூடி விட்டார். காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கியமான சருமத்திற்கு தயிர் போதும்..!!
Next post இலவு காத்த கிளிகளாக சம்பந்தனும் சுமந்திரனும்..!! (கட்டுரை)