அமெரிக்க தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த பெண்: நிகழ்ந்த விபரீத சம்பவம்..!!

Read Time:2 Minute, 29 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் அந்நாட்டின் தேசியக்கொடி மீது சிறுநீர் கழித்த காரணத்திற்காக அவருக்கு மர்ம நபர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க சுதந்திரம் பெற்ற நாளான யூலை 4-ம் திகதி நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்துள்ளன.

இதே தினத்தில் Emily Lance என்ற பெண் செய்த செயல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கழிவறை ஒன்றில் நின்ற இப்பெண் அமெரிக்க தேசியக்கொடியை தரையில் விரித்துவிட்டு அதன் மீது சிறுநீர் கழித்துள்ளார்.

இக்காட்சியை வீடியோவாக பதிவு செய்த அவர் அதனை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

’அமெரிக்காவை வெறுக்கிறேன். அமெரிக்க தேசியவாதத்தை எதிர்க்கிறேன். அமெரிக்க நாட்டின் தேசியக்கொடி எனக்கு பிடிக்கவில்லை’ எனப் பலத்த குரலில் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

வீடியோவை பார்த்த பலரும் பெண்ணின் செயலுக்கு கண்டனம் செய்து வருகின்றனர்.

சில மர்ம நபர்கள் பெண்ணிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தொடர்ந்து மிரட்டல் வருவதை தொடர்ந்து பேஸ்புக்கில் இருந்த வீடியோவை அவர் நீக்கியுள்ளார்.

பின்னர், ‘நான் செய்த செயலுக்கு என் குடும்பத்தினரை தொந்தரவு செய்யாதீர்கள். என் செயலில் எனது குடும்பத்தினருக்கு எந்த ஈடுப்பாடும் இல்லை’ எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் கருத்து சுதந்திரம் மற்றும் தனிமனித உரிமை சிறப்பாக காக்கப்படுவதால், அமெரிக்க தேசியக்கொடியை அவமதிப்பது சட்டப்படி குற்றமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பொது இடத்தில் கடைபிடிக்க வேண்டிய மேஜை நாகரிகம்..!!
Next post வாயைத் திறந்தாலே பொய்..! ஜூலியை டார்கெட் பன்னும் பிக்பாஸ்..!! (வீடியோ)