கர்ப்பிணி பெண்களே இந்த உணவுகள் மிகவும் ஆபத்தாம்…!!

Read Time:2 Minute, 13 Second

pregnant_lady_eating001.w245கர்ப்பமாக உள்ள பெண்கள் அதிக கொழுப்புடைய உணவு பொருட்களை உட்கொண்டால் மார்பக புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாக சமீபத்தில் வெளியான ஆய்வு ஒன்று கூறுகின்றது.

கர்ப்ப காலத்தில் பெண்கள் உடல் எடையை அதிகரிக்க பல்வேறு உணவு வகைகளை அதிகம் சாப்பிடுவார்கள். இதில் பெரும்பாலும் கொழுப்பு சம்பந்தமாக உணவுகளை விரும்பியோ அல்லது வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு நல்லது என்ற பெயரில் அதிகம் எடுத்துக் கொள்வார்கள்.

இது குழந்தை வளர்ச்சிக்கு உதவும் என்ற ஒரு கருத்து நிலவி வந்தாலும், இதுபோன்ற கொழுப்பு உணவுகளைத் தொடர்ந்து எடுத்து வந்தால் மார்பக புற்றுநோய் வர வாயப்பு அதிகம் உள்ளது என சமீபத்தில் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்கள் அவர்களின் உடல் எடையை அதிகரிக்க கொழுப்பு சத்து அதிகமுள்ள உணவை எடுத்துக்கொண்டாலும் மார்பக புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களால் கொழுப்பு சக்தி அதிகரித்து அது தாய்மார்களையும் கார்ப்பிணி பெண்களையும் எளிதாகத் தாக்கி அவர்களுக்கு மார்பக புற்றுநோய் உண்டாக காரணமாகி விடுகிறது.

எண்ணெய், நெய் உள்ளிட்ட கொழுப்பு வகை உணவுகளை சாப்பிடுவதால் இந்த பாதிப்பு உண்டாகிறது. இந்தநோய் த‌லைமுறை தலைமுறையாகவும் பரவ வாய்ப்புள்ளது எனவும் அந்த ஆய்வு கூறுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவு சார்ந்த சில உண்மைகள்: எல்லாரும் கட்டாயம் தெரிந்துக் கொள்ளவேண்டியது..!!
Next post நான் இப்போவே என் வீட்டுக்கு போகனும்: கண்ணீர் விட்ட ஜூலி… அப்படி என்ன நடந்தது?..!! (வீடியோ)