கருத்துப் போன முகம் டாலடிக்கணுமா?… மாம்பழம் எதுக்கு இருக்கு?..!!

Read Time:2 Minute, 6 Second

201707031940163405_mango-can-enhance-your-beauty-naturally_SECVPF-333x250முகச்சுருக்கத்தை போக்க இயற்கை முறையில் பல வழிகள் உள்ளன, அவற்றில் ஒன்றுதான் மாம்பழ பேஸ்பேக்.

மாம்பழத்தில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்டுகள் உள்ளன. அவை முகத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும்.

மாம்பழ சதைப் பகுதியுடன் முட்டை வெள்ளைக் கருவை சேர்த்து நன்றாக கலக்குங்கள். பின் முகத்தில் பேஸ்பேக்காக போட்டு 20 நிமிடம் நன்றாக காய விடுங்கள்.

வேண்டாத சதைகள் இறுகி, முகத்தில் வரும் முதிர்ந்த தோற்றத்தையும் தடுக்கும்.

மாம்பழ சதைப்பகுதியை எடுத்து பேஸ்ட்டாக்கி, முகத்தில் தடவி மசாஜ் செய்யுங்கள். 20 நிமிடம் காய்ந்ததும் குளிர்ந்த நீரினால் கழுவுங்கள். உங்கள் முகம் ஜொலிப்பதை கண்கூடாகக் காண முடியும்.

நன்றாக காய வைத்த மாம்பழத் தோலினை பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் நன்றாக ஸ்க்ரப் செய்யுங்கள். ஒருவாரம் தொடர்ந்து செய்தால், கரும்புள்ளிகள் போயே போச்சு.

மாம்பழத் தோலினை உலர வைத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதனுடன் பால் பவுடரை கலந்து பேஸ்ட் போலச் செய்து, இதனை முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவிட வேண்டும்.

பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் முகப்பரு பெரிய பிரச்னையாகத்தான் இருக்கிறது. மாம்பழ சதைப் பகுதியுடன் சிறிது மஞ்சள், கலந்து முகத்தில் பூசலாம். நாளடைவில் முகப்பரு இருந்த இடமே தெரியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்கள் தங்கச் சுரங்கம்!! உடலுறவில் உச்சம்..!!
Next post 6 வயது மகன் 75 கிலோ- 8 வயது மகள் 70 கிலோ..!!