ஜி.எஸ்.டி., கேளிக்கை வரியை எதிர்த்து டி.ராஜேந்தர் நாளை போராட்டம்..!!

Read Time:1 Minute, 44 Second

201707031733076830_T-Rajendar-tomorrow-protest-for-GST-and-Entertainment-Tax_SECVPFமத்திய அரசு கடந்த ஜுலை 1-ந் தேதி முதல் ஜி.எஸ்.டி என்ற பெயரில் நாடு முழுவதும ஒரே மாதிரியான வரியை அமல்படுத்தியுள்ளது. சி.எஸ்.டியில் சினிமா டிக்கெட்டுகளுக்கு 18 முதல் 28 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர உள்ளாட்சி அமைப்புகள் மூலமாகவும் கூடுதலாக 30 சதவீதம் கேளிக்கை வரியை தமிழக அரசு விதித்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் இன்று வேலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 1000-க்கும் மேற்பட்ட திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது. இதனால், தயாரிப்பாளர்களுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இந்த இரட்டை வரி விதிப்புக்கு தமிழ் திரையுலகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனரும், நடிகருமான டி.ராஜேந்தர், இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை காலை 10.30 மணிக்கு பிலிம்சேம்பரில் போராட்டம் நடத்தவிருக்கிறார். இதில் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளுமாறு டி.ராஜேந்தர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜுலி ஏற்கனவே நடிகை என்பது உங்களுக்கு தெரியுமா?..!! (வீடியோ)
Next post மானை விழுங்கிய ராட்சத பாம்பின் அவலநிலை…!! (வீடியோ)