குதிகால் வெடிப்பை மறையச் செய்யும் ஆலிவ் எண்ணெய்..!!

Read Time:3 Minute, 23 Second

massaggio_ai_piedi_torino-350x233ஒரு பாத்திரத்தில் இரண்டு லிட்டர் இளஞ்சூட்டோடு இருக்கும் நீரை கொண்டு நிரப்பி கொள்ளுங்கள். அத்துடன், இரண்டு டேபிள் ஸ்பூன் தேனையும் சேர்த்து… உங்கள் வெடிப்புற்ற குதிகாலை அதில் ஊற வையுங்கள். அதன்பின், பதினைந்து நிமிடங்கள் கழித்து அதாவது தண்ணீர் சூடு குறையும் வரை வைத்திருந்து எடுத்து, நிவாரணத்தை பெற்று மகிழுங்கள். தேனில் இருக்கும் நுண்ணுயிரிகள், உங்கள் வெடிப்புற்ற குதிகாலை மிருதுவாக வைத்துகொள்வதோடு மென்மையாகவும் மாற்றுகிறது.

• இரண்டு 200 மில்லிகிராம் வைட்டமின் E மாத்திரையை எடுத்து (மருந்து கடைகளில் கிடைக்கும்) இரண்டாக நறுக்கிகொண்டு உங்கள் கால்களில் அந்த எண்ணெயை கொண்டு தடவிகொள்ள வேண்டும். உங்கள் குதிகாலில் அதிக கவனம் செலுத்த வேண்டியது மிகவும் முக்கியம். உங்களுடைய இரண்டு கால்களிலும் 400 மில்லிகிராம் வைட்டமின் E எண்ணெய் சேர வேண்டியது அவசியமாகும். அந்த எண்ணெயை, உங்கள் சருமம் எளிதாக உறிஞ்சிவிட சிறிது நேரத்துக்கு வைத்திருக்க வேண்டும். அதன்பின்னர், நல்ல சுத்தமான பழைய சாக்ஸ் அணிந்துகொண்டு இரவு முழுக்க ஓய்வில் இருக்க வேண்டும்.

• ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் தூளுடன், ஒன்றரை டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெயை கலந்துகொள்ள வேண்டும். அந்த கலவையை, உங்கள் குதிகாலில் தூங்க செல்லும்முன் தேய்த்துகொள்ள வேண்டும். சாக்ஸ் அல்லது ப்ளாஸ்டிக் பேக்கை இருகால்களிலும் அணிந்துகொள்ள வேண்டும்.

• இரண்டு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெயை எடுத்து சூடுபடுத்தி கொள்ளுங்கள். அது போதுமான அளவில் சூடாக இருக்கும்போது, அதனைகொண்டு உங்கள் கால்களை ஊற வையுங்கள். அந்த எண்ணெயை அதிகம் கொதிக்க வைத்துவிட கூடாது என்பதை கவனத்தில் கொண்டு, வெப்ப நிலையை பரிசோதித்து, அதன் பின்னர் தான் உங்கள் கால்களை அதில் ஊற வைக்க வேண்டும். இந்த சிகிச்சை முறையை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

• ஒரு பழுத்த வாழைப்பழத்தை மசித்துகொண்டு, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பால் க்ரீமை சேர்த்து நன்றாக கலந்துகொண்டு, ஒரு வாரத்துக்கு சூப்பர் ஈரப்பதம் கொண்ட கலவையை பயன்படுத்தி வர குதிக்கால் வெடிப்பு மறையும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவின்போது என்ன செய்தால் அதிகப்படியான இன்பம் பெறலாம்?..!!
Next post எடையைக் குறைக்க ஓடிய மனைவி… சான்ஸை சாதகமாக்கி பழிக்கு பழி வாங்கும் கணவன்..!! (வீடியோ)