பரபரப்பாகும் பிக்பாஸ்.. வெளியேற்றப்படுகிறாரா ஜூலி..!! வைரலாகும் காட்சிகள்…!! (வீடியோ)
பல மொழி டிவி சேனல்களில் வெற்றி பெற்ற, பிக்பாஸ் நிகழ்ச்சி, இப்போது தமிழுக்கு அறிமுகம் ஆகியுள்ளது. தமிழில் நடிகர் கமல்ஹாசன், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார்.
நிகழ்ச்சியினர் ஏற்பாடு செய்து கொடுத்துள்ள ஒரு பெரிய வீட்டுக்குள் 15 போட்டியாளர்கள் 100 நாட்களுக்கு வசிக்க வேண்டும் என்பது விதிமுறை. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 15 போட்டியாளர்களுக்கும் பல்வேறு நிபந்தனைகள், விதிமுறைகள் உள்ளன.
போட்டியாளர்களை மொத்தம் 30 சிசிடிவி காமிராக்கள் கண்காணித்தபடியே இருக்கும். தினமும் இரவு 9 மணி முதல் 10 மணிவரை விஜய் டிவி இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. அன்றைய தினம் நடந்தவற்றில் முக்கியமானவற்றை தொகுத்து அந்த நேரத்தில் காண்பிக்கிறார்கள்.
நேற்றைய முதல் நாள் எபிசோடில், 15 பேருக்குமான ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் நிகழ்வுகள் காட்டப்பட்டன. பெரும்பாலான பங்கேற்பாளர்கள் கவிஞர் சினேகனை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.
அவரும் அதை ஏற்றுக்கொண்டார். சூடுபிடிக்கிறது இதையடுத்து பிக்பாஸ் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எப்படி தலைவரை அனைவரும் கூடி தேர்ந்தெடுத்தார்களோ அதேபோல முதலில் வெளியேறப்போவது யார் என்பதையும் அனைவரும் கூடி முடிவெடுத்து ‘நாமினேட்’ செய்ய வேண்டுமாம்.
ஜூலி இன்று அந்த நாமினேஷன் ரவுண்ட் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்களை சொல்கிறார்கள். அதிக பங்கேற்பாளர்கள் ஜூலி என்ற பெயரை உச்சரித்துள்ளனர்.
விஜய் டிவி ஷேர் செய்துள்ள ஒரு குட்டி புரமோஷன் வீடியோவில் இந்த காட்சிகள் இடம் பிடித்துள்ளன.
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் புகழ் பெற்றவர் ஜூலியானா என்ற ஜூலி. செவிலியரான இவர், பிக்பாசில் பங்கேற்றுள்ளார். சக பங்கேற்பாளர் நடிகை ஆர்த்திக்கும் இவருக்கும், படுக்கையை தேர்வு செய்வதில் இருந்து ஆரம்பித்து முட்டல், மோதல்தான்
இந்த நிலையில், செவிலியர் வேலையை விட்டுவிட்டு நேரப்போக்கிற்காக, ஜூலி இங்கு வந்துள்ளார் என ஆர்த்தி கூறும் காட்சிகள் வீடியோவில் உள்ளது. இதனால் இன்று யாரை வெளியேற்றப்போகிறார்களோ என்ற எதிர்பார்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating