சிம்புவின் `ஏஏஏ’ படக்காட்சிகள் ரத்து: ரசிகர்கள் ஏமாற்றம்..!!
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள `அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ரம்ஜானை முன்னிட்டு உலகம் முழுவதும் இன்று பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. சிம்பு படம் என்றாலே படம் ரிலீசாகும் வேலையில் யாராவது, ஏதாவது பிரச்சனைகளை கிளப்புவார்கள். அந்த வகையில் இன்று ரிலீஸாகும் `ஏஏஏ’ படத்திற்கும் ஒரு பிரச்சனை வந்துள்ளது.
முன்னணி நடிகர்களின் படங்கள் என்றாலே படம் ரிலீசாவதற்கு முன்பாக அவரது ரசிகர்களுக்கு என்று சிறப்பு காட்சிகள் போட்டுக் காட்டப்படும். அந்த வகையில் சிம்புவின் `ஏஏஏ’ படமும் ரசிகர்களுக்கான சிறப்புக் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சென்னையில் காலை 6 மணிக்கு திரையிடவிருந்த சிறப்பு காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். காலை 11 மணி முதல் அனைத்து திரையரங்குகளிலும் படம் ரிலீஸ் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.
சென்னையில் போரூர் ஜி.கே.சினிமாஸ், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கம் மற்றும் ஆலந்தூரில் உள்ள ஒரு திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
`ஏஏஏ’ அஸ்வின் தாத்தா, மதுர மைக்கேல் உள்ளிட்ட 4 கெட்டப்புகளில் சிம்பு நடித்திருக்கிறார். சிம்பு ஜோடியாக ஸ்ரேயா சரண், தமன்னா பாட்டியா, சானா கான் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating