திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வரும் பாலியல் நோய்..!!
திருமணமான புதிதில், சில பெண்களுக்கு வயிற்று வலி ஏற்பட்டு, சிறுநீர் கழிக்கும் போது கடுமையான எரிச்சல் தோன்றுவதுண்டு இந்த அறிகுறிகள் இவ்வாறு புதுமணப் பெண்களுக்கு தோன்றுவதற்குக் காரணம், அவர்களின் சிறுநீர் வெளியாகும் உறுப்புக்களில் கிருமித் தொற்று ஏற்படுவதே ஆகும். ஆடவன், தன் இளம் மனைவியோடு உடலுறவு கொள்ளும்போது, தன்னையும் அறியாமலே அவன் வழியாக, அவன் ஆண் குறி வாயிலாக, அவள் சிறுநீர் கழிக்கும் உறுப்புக்களில் கிருமிகள் புகக் காரணம் ஆகிவிடுகின்றன. பெண்ணின் பெண் குறிக்குக் கொஞ்சம் மேலேதான், அவள் தன் சிறுநீரை வெளியாக்கும் முத்திரக் குழாய் என்னும் யூரீத்ராவின் துவாரம் அமைந்துள்ளது என்பதனை நாம் இங்கு நினைவு கூரவேண்டும்.
இவ்வாறு திருமணமான புதிதில் பெண்டிருக்கு ஏற்படும் இந்தக் கிருமித் தொற்றினை தேனிலவு சிறுநீர்க் கிருமித் தொற்று என்று நயமாக மருத்துவர்கள் கூறுவர். ஆங்கிலத்தில் இதனை ஹனிமூன் பைலோ நெஃப்ரைட்டிஸ் என்பர் திருமணமான உடனேயே புதுமணத் தம்பதிகள் தேனிலவு செல்வர் தேனிலவு செல்லும் காலத்தில்தானே இத்தகு கிருமித் தொற்று ஏற்படுகின்றது.
உச்சக்கட்டத்தின் போது என்ன நடக்கிறது? What Happens During Orgasm
செக்ஸ் உறவின் போது ஏற்படும் உச்சக்கட்ட இன்பத்தைப் பல்வேறு பெண்கள் அவரவர்களுக்குத் தோன்றிய விதத்தை கூறுவது ஆச்சரியான விஷயம். அந்த நேரத்தில் அந்தரங்கத்தில் தொங்குவது போல உணர்கிறேன் என்று சில பெண்களும், தீவிரமான ஒரு பரவச நிலையை அடைவதாகச் சிலரும், இந்தப் பரவச நிலை மன்மதபீடத்தில் தொடங்கி உடல் முழுவதும் பரவுகிறதாக ஒரு சிலரும், பால் உறுப்புக்களில் ஒரு வித வெப்பம் தோன்றி மறைவதாக ஒரு சிலரும், மின்னல் உடல் முழுவதும் தோன்றி வியாபிக்கிற கட்டம் அது… எனவும் பெண்கள் உச்சக்கட்டத்தை வேறு வேறாகக் கூறுகின்றனர்.
ஆனால் ஆண்களைப் போல பெண்கள் உச்சக்கட்டம் அடைந்ததும் விந்தைப் பீய்ச்சுவதில்லை. மாறாக அவர்களது குறியில் மதன நீர் என்னும் ஒரு வகை பசை போன்ற நீர் சுரக்கிறது. இதைத்தான் சில பெண்கள் தமக்கும் விந்து சுரக்கிறது எனத் தவறாக எண்ணிக் கொள்கின்றனர்.
பெண்களைப் போலன்றி, ஆண்களின் உச்சக்கட்டம் இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் விந்தணுக்களைக் கொண்டு செல்லும் குழாய்கள்- புரோஸ்டேட் விந்துக்குழாய்கள் ஆகியவற்றில் தொடர்ச்சியான இறுக்கங்கள் தோன்றி விந்து சிறுநீர்க்குழாயில் செலுத்தப்படுகிறது. அப்போது தான் ஆண் இனி விந்து வெளியேறி விடும் என்ற தீவிரத்தை அனுபவிக்கிறான். இனியும் தன்னால் விந்து வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாது என உணர்கிறான்.
உச்சக்கட்டம் எதைப்பொறுத்தது…?
இன்ப எழுச்சி நிலையில் உணர்வுகளைத் தூண்டுதல்கள் மேலும் மேலும் தீவிரமகும் போது இதுவரையில் சேர்த்து வைத்துக் கொண்டிருந்த பாலுணர்வு இறுக்கத்தை உடல் இனியும் வைத்துக்கொள்ள இயலாமல் திடீரென்று உத்வேகத்துடன் வெளியே தள்ளுகிறது. இந்த நிலையையே உச்ச நிலை என்கிறோம். ஆங்கிலத்தில் இதனை க்ளைமாக்ஸ் அல்லது கமிங் என்கின்றனர். இந்த நிலை நீடிக்காது. மிக மிகக் குறுகிய நிலை.
இந்த நிலையில் சில நொடிகளில் தாளகதியில் தசைச்சுருக்கங்கள் தோன்றி மிகத் தீவிரமான உணர்வலைகள் உணரப்படுகின்றன. உடனே நெகிழ் நிலை ஏற்படுகிறது. உடற்கூறு அடிப்படையில் உச்சக்கட்டம் என்பது பேரின்பம் அல்லது மெய்மறந்த நிலை அல்லது ஆனந்த அனுபவம் என்று பல வகையாகக் கூறப்படுகிறது.
உச்சக்கட்டம் ஆணுக்கு-ஆண் ஒரே ஆணுக்கு, உறவுக்கு உறவு மாறுபடும். சில சமயம் உணர்வலைகள் ஒருங்கே கூடி ஒரு பெரிய வெடிப்புடன் உச்சக்கட்டம் நேரலாம். சில உச்சக்கட்டங்கள் மிக மிக மென்மையாக உணரப்படலாம். உச்சக்கட்டம் என்பது தீவிரம் அல்லது தீவிரமின்மை என்பது உறவு கொள்ளும் நபர், நேரம், எதிர்பார்ப்பு, சூழ்நிலை, மனநிலை, ஆகியவற்றைப் பொறுத்துத்தான் அமையும். எனவே இதில் இத்தனை மாறுபாடுகள் உள்ளன.
உச்சக்கட்டத்தில் ஆண் என்ன உணர்கிறான்…?
விதைகள் முற்றிலும் மேலே ஏறி குறியின் அடிப்பகுதியை நெருங்குவது போல இருந்தால் உச்சக்கட்டம் வெகு சீக்கிரத்தில் வந்து விடும் என்று அர்த்தம். ஆனால் ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் இவ்வாறு விதை மேலே எழும்புவது குறைவு. இதற்குக் காரணம் விந்து வெளியேறும் நிலையின் இறுக்கம் குறைந்து வருகிறது என்று பொருள்.
உச்சக்கட்டம் நெருங்கும் நேரம் சிலருக்கு விந்து நீர் பனித்துளி போல குறியின் முனைப்பகுதியில் வந்து நிற்கும். இந்தத் திரவத்திலும் ஏராளமான விந்தணுக்கள் இருக்கலாம். இந்த நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக புரோஸ்டேட் சுரப்பியிலும் சில ஆண்கள் நன்றhக வெப்பத்தையும், ஒரு வித இறுக்கத்தையும் உணர்கின்றனர்.
இதே போல புட்டம் மற்றும் தொடைப்பகுதியிலும் இது போன்று உணர்வார்கள். சில சமயம் இதயத்துடிப்பு அதிகமாக உணரப்படும். அப்போது மூச்சு விடுதலில் ஒரு விதக் கடின நிலை உண்டாகி உச்சக்கட்டம் உடனே வந்து விடுகிறது. முக்கியமாக அந்த உச்சக்கட்ட நிலையில் ரத்த அழுத்தமானது அதிகமாக இருக்கும்.
பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
குழந்தை பெறத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20 சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஆணுக்கு ஆண் மாறுபடும் உச்ச நிலை…*
கிளர்ச்சி நிலையில் தொடர்ந்து பாணர்வு இறுக்கம் நீடிக்க நீடிக்க அடுத்த கட்டமான இன்ப எழுச்சி நிலைக்கு வருகின்றன. இந்த நிலை நீடித்தால் உச்சக்கட்டம் வருகிறது. இன்ப எழுச்சி நிலை ஆணுக்கு ஆண் மாறுபடும். சிலர் எழுச்சி நிலையில் நீடிக்க இயலாமல் உடனடியாக உச்ச நிலையை அடைந்து விடுவார்கள். சிலருக்கு உச்ச நிலை வரத் தாமதமாகும்.
பெண்ணின் இன்ப எழுச்சி நிலையில் ரத்த நாளங்களில் அதிக ரத்த ஓட்டம் காரணமாக இறுக்கம் அதிகாpத்து திசுக்கள் புடைத்தெழுகின்றன. இந்தப் புடைப்பு நிலை ஆர்காஸ்மிக் ப்ளாட்பாம்- எனப்படுகிறது. இந்த நேரத்தில் பெண்குறியின் உட்சுவர் 30 சதவிகிதம் குறுகி ஆண் குறியைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளும். இந்த நேரத்தில் கருப்பையும் முன்னுக்கு வரும்.
உச்ச கட்டத்தை அடைவதில் ஏதேனும் பிரச்சனைகளோ குறைபாடுகளோ இருந்தால் தயங்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
Average Rating