மனித உடலில் உள்ள உலோகங்கள்..!!

Read Time:3 Minute, 8 Second

201706190830547475_Metals-in-the-human-body_SECVPFஉடலில் உள்ள உலோகங்கள் அளவு தேவையைவிட குறைந்தாலோ, அதிகரித்தாலோ நோய்கள் வருகின்றன. எனவே, இவற்றின் அளவு சமநிலையில் இருத்தல் மிக அவசியம். மனித உடலில் உள்ள உலோகங்கள் எவை என்று தெரிந்துகொள்வோம்.

1. கால்சியம் – பற்கள் மற்றும் எலும்புகளில் கால்சியம் ஹைட்ராக்ஸி அபடைட் எனும் சேர்மமாக இருக்கிறது. நரம்பு செல்களின் வளர்ச்சியிலும், கால்சியம் முக்கிய பங்காற்றுகின்றன.

2. மெக்னீசியம் – எலும்பு மற்றும் உடல் கட்டமைப்பிலும் மெக்னீசியம் முக்கியமானவையாக இருக்கின்றன. உடலில் நிகழும் பல்வேறு வேதிவினைகளை, மெக்னீசியம் அயனிகள் கட்டுப்படுத்துகின்றன.

3. சோடியம் – ரத்தம் மற்றும் செல் திரவங்களில் சோடியம் இருக்கின்றன. இவை, உடலின் கார-அமில மதிப்பையும், அழுத்த சமநிலையினையும் சீராக வைத் திருக்க உதவுகிறது.

4. பொட்டாசியம் – சோடியம் அயனிகளை போன்றே, பொட்டாசியம் அயனிகளும், செல் திரவங்களிலும், ரத்தத்திலும் இருக்கிறது. அமிலத் தன்மை மற்றும் அயனி அழுத்தத்தையும் சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.

5. இரும்புச் சத்து – இரும்பு அயனிகள், உடல் முழுவதும் ஆக்ஸிஜனை கடத்துவதற்கு காரணமாக திகழ்கின்றன.

6. செம்பு (காப்பர்) – உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றங்களிலும், உடல் உறுப்புகளின் முறையான செயல்பாட்டிற்கும் காப்பர் அவசியமான தனிமமாகும். மேலும், நோய் எதிர்ப்பு திறனை அளிப்பதிலும் முக்கிய பங்களிக்கிறது.

7. மாங்கனீசு – சில நொதிகளில் மாங்கனீசு அயனிகள் இருக்கின்றன. குறிப்பாக, கார்போஹைட்ரேட்டு, அமினோ அமிலங்கள் மற்றும் கொழுப்பு வளர்ச்சிதை மாற்றத்திலும் மாங்கனீசை கொண்ட நொதிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

8. துத்தநாகம் – உடலில் இருக்கும் முக்கிய ஹார்மோன் களில் துத்தநாகம் உள்ளது. பல்வேறு உடற்செயல்களை நிகழ்த்துவதற்கும் துத்தநாகம் அயனிகளை கொண்ட நொதிகள் தேவைப்படுகிறது.

9. கோபால்ட் – வைட்டமின் B 12 நீரில் கரையக்கூடிய வைட்ட மினில் கோபால்ட் அயனி இருக் கிறது. மூளை மற்றும் நரம்பு மண்டல செயல்பாடுகளை கட்டுபடுத்துவதில் வைட்டமின் B 12-ன் பங்கு முக்கியமானது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த உறவுக்கார நபர்..!!
Next post செல்வராகவன் ரசிகர்களுக்கு இன்று காத்திருக்கும் சிறப்பு விருந்து..!!