சிலந்தி (silanthi.net) என்னும் இணையத்தளம் ஊடாக பல மொழிகளிலும் செய்திகள்

Read Time:1 Minute, 58 Second

Smile.jpgதமிழ், ஆங்கிலம், ஜேர்மனி, பிரான்ஸ், டச், (Dutch) டெனிஸ், நோர்வேஜியன் மற்றும் சுவிடிஸ் ஆகிய மொழிகளில் இலங்கையில் இடம்பெறும் தமிழ்மக்கள் தொடர்பான செய்திகளை அறிவதற்கு சிலந்தி என்னும் இணையத்தளம் வகைசெய்துள்ளது.

தற்சமயம் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் போராட்டம் சம்பந்தமான தகவல்களையும் தாம் வாழும் நாடுகளில் வெளியாகும் அந்தந்த நாடுகளின் மொழிகளில் உதாரணமாக பத்திரிகைகள், வானொலிகள், இணையத்தளங்கள் போன்றவற்றின் ஊடாக உடனுக்குடன் அறிவதற்கான வாய்ப்புக்களை சிலந்தி (www.silanthi.net) ஊடாக அறிந்து கொள்ளலாம்.

புலம்பெயர் நாடுகளில் அந்தந்த நாடுகளில் வாழும் தமிழ்மக்கள் தொடர்பாகவும் வெளியாகும் செய்திகளையும் கூட அறிந்துகொள்ளலாம். செய்திகள் அனைத்தும் பல நூற்றுக்கணக்கான தகவல் சாதனங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றது.

இதன்மூலம் இலங்கை நிலவரங்கள் தொடர்பான தகவல்களை பலகோணங்களிலும் அறிவதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதைத்தவிர புலம்பெயர் நாடுகளில் வாழும் இளைய தலைமுறையினர் அவர்களுக்குப் பரீட்சாத்தமான மொழிகளில் தகவல்களை அறிந்துகொள்வதற்குமான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளது.

மேற்படி வாய்ப்பினை டென்மார்க் தமிழ் ஜனநாயகப் பேரவையினர் (Tamil Democratic Forum, Denmark www.tamildemocraticforum.dk) வழங்குகின்றனர்.

Smile.jpg

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பௌர் லண்டன் விஜயம்
Next post அமெரிக்கா: மாணவர்களுடன் செக்ஸ்இந்திய ஆசிரியைக்கு 6 ஆண்டு சிறை