சிங்கத்தோடு சொகுசு காரில் சென்ற நபருக்கு நேர்ந்த கதி!! அலறி அடித்து ஓட்டம் பிடித்த மக்கள்..?…!! (வீடியோ)

Read Time:1 Minute, 38 Second

car_arr002.w245பாகிஸ்தானில் சிங்கத்துடன் காரில் பயணம் வந்த தொழிலதிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர் சாக்லைன் ஜாவத். மிருகக் காட்சி சாலை நடத்தி வரும் இவர், சிங்கம் ஒன்றை இரவு நேரத்தில் தனது காரில் ஏற்றிக்கொண்டு கராச்சி பகுதி முழுவதும் சொகுசாக பயணம் மேற்கொண்டுள்ளார்.

அப்போது காரில் சிங்கத்தைப் பார்த்த மக்கள் அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர்.

மேலும், ஆட்டோ, பைக், கார் போன்றவற்றில் சென்றவர்களும் பீதியடைந்துள்ளனர்.

சிங்கத்தை காரில் பார்த்த சிலர் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளத்தில் இந்த வீடியோவைப் பார்த்த போலீசார், ஜாவத்தை கைது செய்தனர்.

இது தொடர்பாக மூத்த காவல்துறை கண்காணிப்பாலர் முஹ்தாஸ் ஹைதர் கூறுகையில், மிருகக் காட்சி சாலை நடத்தி வரும் ஜாவத், சிங்கத்தை இப்படி கொண்டு சென்றது ஏற்கத்தக்கது அல்ல. இதனால், அவரை கைது செய்தோம். பின்னர் அவரை ஜாமீனில் விடுதலை செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிம்பு படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கிய தணிக்கை குழு..!!
Next post காணாமல் போன பிரபல சீரியல் நடிகை கர்ப்பமாக இருக்கிறாரா? பரவும் செய்தி..!!