தேவதாசி தொழிலில் 5 வயது சிறுமியை தள்ளி விழா கொண்டாடியவர்கள் கைது..!!

Read Time:1 Minute, 45 Second

201706171817580400_Three-held-for-performing-rituals-of-10-yearold-girl-after_SECVPFகர்நாடக மாநில அரசின் சட்டப்படி கடந்த 1982-ம் ஆண்டு தேவதாசி முறை ஒழிக்கப்பட்டது. இருப்பினும், ரகசியமாக தேவதாசி முறை மாநிலத்தின் சில பகுதிகளில் இன்னும் புழக்கத்தில் உள்ளது.

இந்நிலையில் , குல்பர்கா மாவட்டத்தில் உள்ள மாவின்சுர் கிராமத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமிக்கு கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் தேவதாசி பட்டம் கட்டி மதச்சடங்குகளை பெற்றோர் மற்றும் அந்த ஊரில் உள்ள கோவில் சாமியார் நடத்தியுள்ளனர், தற்போது பத்து வயதாகும் அந்த சிறுமி தேவதாசியாக வாழ்த்து வருவதாகவும் என்ற விபரம் குழந்தைகள் நல குழுவினருக்கு தெரியவந்தது.

இதையடுத்து, அந்த சிறுமியை தேவதாசி முறையில் இருந்து நேற்று மீட்ட குழந்தைகள் நல அமைப்பினர் அளித்த புகாரின் பேரில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் மேற்படி சிறுமியை தேவதாசி தொழிலில் தள்ளிய அவரது பெற்றோர், இதற்கான சடங்கு, சம்பிரதாயங்களுடன் விழா நடத்திய சாமியாரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

மேலும், இதற்கு உடந்தையாக இருந்த இரு பள்ளி ஆசிரியைகள் மற்றும் அங்கன்வாடி பெண் பணியாளர் ஆகிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருமணமே வேண்டாம் என்ற பிரபல நடிகை… தற்போது நீண்ட நாள் நண்பரை மணக்கிறாரா?..!!
Next post நல்ல வேடம் கிடைத்தால் எந்த பாத்திரத்திலும் நடிப்பேன் -அர்த்தனா..!!