சரும நிறத்தை அதிகரிக்கும் புளி பேஸ் பேக்..!!

Read Time:3 Minute, 32 Second

201706151149024143_tamarind-face-pack-for-skin-care_SECVPFபுளி வெறும் சுவைக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தைப்பாதுகாக்கவும் பயன்படுகிறது. அத்தகைய புளி சருமம் மற்றும் முடிக்கும் மிகவும் நல்லது. புளி சருமம் மற்றும் தலைமுடியின் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும்.

இதற்கு புளியில் உள்ள வைட்டமின்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கனிமச்சத்துக்கள் தான் காரணம். புளியைக்கொண்டு எப்படி சருமம் மற்றும் தலைமுடியினைப் பராமரிப்பது பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

புளி சருமத்தின் பொலிவை அதிகரிக்கவும் உதவும். அதற்கு புளியை சுடுநீரில் ஊற வைத்து சாறு எடுத்து, அதில் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் பொலிவு அதிகரிக்கும். மேலும் தொடையில் உள்ள செல்லுலைட்டை நீக்க சிறிது புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, அதில் சிறிது பேக்கிங் சோடா தூவி, பிரஷ் பயன்படுத்தி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் செல்லுலைட் மறையும்.

புளியில் ஆல்பா-ஹைட்ராக்ஸில்-ஆசிட் உள்ளது. இது சருமத்துளைகளில் தங்கியுள்ள அழுக்குகளையெல்லாம் நீக்கும். எனவே புளிச்சாற்றில் 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 2 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் முழுமையாக நீக்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக இருக்கும்.

புளிச்சாற்றில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால், முகச்சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

பலருக்கும் கழுத்தைச்சுற்றி கருமையான படலம் ஒன்று இருக்கும். இதனை நீக்க புளிச்சாற்றில் தேன் மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் 3-4 முறை செய்து வந்தால், கருமையை விரைவில் போக்கலாம்.

புளியில் வைட்டமின்கள், நார்ச்சத்து, அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் போன்றவை உள்ளது. இவை சருமத்திற்கு ஊட்டம் அளித்து, முதுமைத்தோற்றம் வருவதைத்தடுக்கும்.

அதற்கு புளிச்சாற்றில் தேன் மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சந்தோச சப்தங்கள் படுக்கை அறையை சங்கீதாமாக்கும்..!!
Next post பஞ்சாயத்தை கூட்டி ஊருக்கு நடுவே முதலிரவு நடத்தும் மக்கள்..!!