பணக்கார தொழில் அதிபர்களை திருமணம் செய்துக் கொண்ட புத்திசாலி நடிகைகள்..!!

Read Time:3 Minute, 45 Second

buisness_heroines000.w245பெரும்பாலான இந்திய நடிகைகள் ஒன்று துறை சார்ந்த நடிகர் இயக்குனர்களை திருமணம் செய்துக் கொண்டு அல்லது மிக பெரிய தொழில் அதிபர்களை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆனவர்களாக தான் இருக்கிறார்கள்.

இந்த லிஸ்டில் பணக்கார தொழில் அதிபர்களை விரும்பி திருமணம் செய்துக் கொண்ட இந்திய நடிகைகள்.

ஷில்பா ஷெட்டி!

அன்று முதல் இன்று வரை உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டிருப்பவர் ஷில்பா ஷெட்டி. இவர் பிரிட்டிஷ் தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஐ.பி.எல் அணி ஒன்றும் இருக்கிறது.

ராணி முகர்ஜி!

திருமணமே செய்துக் கொள்ள மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட ராணி முகர்ஜி ஆதித்யா சோப்ராவை திருமணம் செய்து அதிர வைத்தார். யாஷ் சோப்ரா எனும் இந்தியாவின் பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர்.

ஸ்ரீதேவி!

ஸ்ரீதேவிக்கு இது இரண்டாவது திருமணம். இவர் இரண்டாவதாக போனி கபூரை திருமணம் செய்துக் கொண்டார். பல மில்லியன் டாலர்களுக்கு சொந்த காரரான போனி கபூர்-ன் மனைவியாக திகழும் ஸ்ரீதேவி அன்று எப்படி இருந்தாரோ, அப்படியே தான் இன்றும் தன்னை அழகாக பேணிக் காத்து வருகிறார்.

அசின்!

தென்னிந்தியா சினிமாவின் சிறந்த நடிகையாக திகழ்ந்து வந்தவர் பாலிவுட் பக்கம் சென்று சற்று சறுக்கினார். அதன் பிறகு என்ன நினைத்தாரோ என்னவோ மைக்ரோமேக்ஸ் மொபைல் நிறுவனர் ராகுல் ஷர்மாவை திருமணம் செய்துக் கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

வித்யா பாலன்!

தன் திறமையால் உயர்ந்த நடிகைகளில் இவரும் ஒருவர். பாட்டு டான்ஸ் என வந்து செல்லும் நடிகைகள் முன், தான் திறமை காண்பிக்கும் படங்களை தேர்வு செய்து தன்னை நிரூபித்தவர். இவர் சித்தார்த் ராய் கபூரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் வால்ட் டிஸ்னி இந்தியாவின் எம்.டி.-யாக இருந்து பிறகு ராஜினாமா செய்தவர். இவர் இந்திய படங்கள் மற்றும் டிவி நிகழ்சிகளை தயாரித்து வருகிறார்.

ஜூஹி சாவ்லா!

பாலிவுட்டின் டார்லிங்காக காணப்படும் ஜூஹி சாவ்லா மேத்தா க்ரூப் உரிமையாளரை திருமணம் செய்துக் கொண்டார். ஆப்ரிக்கா, அமெரிக்கா, கனடா என உலகெங்கிலும் தொழில் செய்து வருகிறார்கள்.

டீனா அம்பானி!

இவர் பெரியளவில் நடிப்பில் சாதிக்கவில்லை என்றாலும். பல நடிகர்கள், இயக்குனர்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இந்தியாவின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான அணில் அம்பானியை திருமணம் செய்துக் கொண்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 11 வயது சிறுவனை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த நபர்: வெளியானது சிசிடிவி காட்சிகள்..!!
Next post கருவாட்டுடன் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டு விடாதீர்கள்..!!