ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம்: கன்னட மொழியில் வெளியிடப்பட்டது..!!

Read Time:6 Minute, 22 Second

201706121358532793_Jayalalitha-biography-book-Published-in-kannada-language_SECVPFமறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு புத்தகம் கன்னட மொழியில் வெளியிடப்பட்டது.

262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தை கன்னட மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் வெளியிட்டு உள்ளார்.

கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு லங்கேஷ் கன்னட பத்திரிகையில் செய்தியாளராக பணியை தொடங்கிய என்.கே.மோகன்ராவ் கன்னட நாடக ஆசிரியர் பி.வி.காரத்துடன் பணியாற்றினார். அதன் பிறகு டெல்லி, சென்னை, கவுகாத்தி மற்றும் கொல்கத்தா ஆகிய நகரங்களில் தூர்தர்‌ஷன் டெலிவி‌ஷன் நிலையங்களில் செய்தியாளர் மற்றும் துணை ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

தற்போது அவர் பெங்களுரில் வசித்து வருகிறார். அவர் எழுதிய புத்தகம் தான் அம்மாஆதாஅம்மு (அம்மு என்கிற ஜெயலலிதா) ஆகும்.

இந்த புத்தகம் குறித்து மூத்த பத்திரிக்கையாளர் என்.கே.மோகன்ராம் கூறியதாவது:-

தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை ‘‘அம்மா, ஆதா, அம்மு- ஜெயலிலதா” என்ற பெயரில் நான் எழுதி வெளியிட்டு உள்ளேன். 262 பக்கங்களை கொண்ட இந்த புத்தகத்தில் 6 பிரிவுகளில் அவரது வாழ்க்கை வரலாற்று சம்பவங்கள் இடம் பெற்று உள்ளன. ஜெயலலிதாவின் குடும்ப பின்னணி, அவரது இளமைப் பருவம், சினிமா பிரவேசம், அரசியல் வாழ்க்கை, குணநலன்கள், அவரது மரணம் ஆகிய 6 பகுதிகளாக பிரித்து இந்த புத்தகம் எழுதப்பட்டு உள்ளது.

ஜெயலலிதாவின் மூதாதையர் ஸ்ரீரங்கத்தில் இருந்து மைசூருக்கு இடம் பெயர்ந்தது அவர்கள் நெல்லூர், லெட்சுமிபுரம், மேலக்கோட்டை ஆகிய பகுதிகளில் வசித்த விவரங்கள், மைசூரிலும், பெங்களூருவிலும் தாயார் சந்தியாவுடன் ஜெயலலிதா குழந்தை பருவ காலத்தில் வளர்ந்த விவரங்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்று உள்ளது.

ஜெயலலிதாவை பற்றி நிறைய அரசியல் புத்தகங்கள் வந்து உள்ளன. ஆனால் என்னுடைய புத்தகம் அவரது குடும்ப பின்னணி பற்றியும், அவரது மூதாதையர்கள் கர்நாடகாவில் வசித்தது பற்றியும், அவரது உறவினர்களிடம் பேசி இந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறேன்.

ஜெயலலிதாவின் அரிய புகைப்படங்களையும் இந்த புத்தகத்தில் சேர்த்து இருக்கிறேன். முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தமிழ் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்தது, சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் ஜெயலலிதா அடைக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்களும் இந்த புத்தகத்தில் விளக்கப்பட்டு உள்ளது.

ஒரு பத்திரிக்கையாளர் என்ற முறையில் நான் சென்னையில் தூர்தர்‌ஷனில் பணியாற்றினேன். முன்னாள் முதல்-அமைச்சர் மறைந்த எம்.ஜி.ஆர். உடல் ராஜாஜி பவனில் வைக்கப்பட்டிருந்த போது அதுதொடர்பான செய்திகளை தொகுத்து தூர்தர்‌ஷனில் ஒளிரப்பினோம்.

நான், என்னுடன் பணியாற்றிய ஊழியர்களுடன் கன்னடத்தில் பேசுவதை அறிந்த ஜெயலலிதா என்னிடமும் கன்னடத்தில் பேசுவார். எம்.ஜி.ஆர். உடலை ஏற்றிசென்ற வேனில் இருந்து ஜெயலலிதாவை கீழே தள்ளியது, அவர் அஞ்சலி செலுத்தியது உள்ளிட்ட வீடியோ கேசட்டுகளை ஜெயலலிதாவின் சகோதரர் ஜெயக்குமாரிடம் நான் கொடுத்தேன். அவர் அதை ஜெயலலிதாவிடம் கொடுத்தார்.

நான் அடுத்தடுத்து ஜெயலலிதாவை சந்தித்தேன். ஜெயலலிதாவை பேட்டி எடுக்கும் நபர் அன்றைக்கு குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. நிறைய கேள்விகளை கேட்டு அவரிடம் பதில் பெற்றேன். ஆனால் அந்த பேட்டி கட்டுரையை வெளியிட முடியவில்லை.

ஜெயலலிதாவை அம்மு என்று எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவின் தாயாரும் தான் அழைப்பார்கள். இதனால் தான் எனது புத்தகத்திற்கு அம்மு என்றால் ஜெயலலிதா என்று பெயர் வைத்து உள்ளேன்.

கன்னட மொழியில் இந்த புத்தகத்திற்கு உள்ள எதிர்பார்ப்பை பொறுத்து அடுத்து தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட இதர மொழிகளிலும் வெளியிடுவது குறித்து ஆலோசனை செய்வேன்.

பானுவாரா என்ற வார பத்திரிகையின் ஆசிரியரும், எனது நண்பருமான மகாதேவ் பிரகாஷ் ஜெயலலிதா இறந்த போது கட்டுரை எழுத சொன்னார். நான் அந்த பத்திரிகையில் கட்டுரை எழுதினேன். அந்த கட்டுரைக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதை படித்த வாசகர்களும், எனது நண்பர்களும் ஏன் ஜெயலலிதா பற்றி புத்தகம் எழுதக்கூடாது என்று என்னிடம் கேட்டனர். அதனால் தான் ஜெயலலிதா பற்றி புத்தகம் எழுதி வெளியிட்டு உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரசியலுக்கு வருவார் ரஜினி… ஆர்வத்துடன் நலப்பணிகளில் ஈடுபடும் ரசிகர்கள்..!
Next post ‘திருடன், திருடன்’ என்று கோஷமிட்ட இந்தியர்கள்.. தலை தெறிக்க ஓடிய விஜய் மல்லையா..!! (வீடியோ)