தெலுங்கு சூப்பர்ஸ்டாருடன் மோதும் கார்த்தி?..!!

Read Time:2 Minute, 18 Second

201706101938171683_Is-Karthi-in-the-race-of-Dussera_SECVPFமணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான காற்று வெளியிடை ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறாவிட்டாலும், வசூல் ரீதியாக ஓரளவு வரவேற்பை பெற்றது. இந்நிலையில், கார்த்தி தற்போது சதுரங்கவேட்டை வினோத் இயக்கத்தில் `தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடித்து வருகிறார். சிறுத்தை படத்திற்கு போலீஸ் அதிகாரியாக கார்த்தி நடிக்கும் படம் என்பதால் இப்படம் குறித்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

பெரும்பாலும் ராஜஸ்தானிலே படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தில், கார்த்திக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இவர்களுடன் அபிமன்யு சிங், போஸ் வெங்கட், ஸ்கார்லெட் மெல்லிஸ் வில்சன் உட்பட பலரும் நடித்து வருகின்றனர். ஜிப்ரான் இசையில், சத்யன்சூரியன் ஒளிப்பதிவில் காட்சிகள் விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரித்து வரும் இப்படத்தை, தசராவை முன்னிட்டு செப்டம்பர் இறுதியில் வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே தசரா விடுமுறை நாளில் சிவகார்த்திகேயனின் `வேலைக்காரன்’ படமும், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடித்துள்ள `ஸ்பைடர்’ படமும் ரிலீசாவதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார்த்தியும் அந்த ரேசில் இணைவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசியா சிறுமியைத் தொடர்ந்து மற்றுமொரு சிறுமியின் அவலநிலை… பலவீனமானோர் பார்க்கத் தடை..!! (வீடியோ)
Next post வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?..!!