மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சாகும் வரை ஜெயில்..!!

Read Time:2 Minute, 11 Second

201706101344166371_Life-Sentence-to-Father-who-raped-his-daughter_SECVPFகொடைக்கானல் கீழ்மலை கிராமமான அடுக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சின்னசாமி (வயது 45). கூலித் தொழிலாளி. மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் கணவன்-மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. எனவே சின்னச்சாமியின் மனைவி அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார்.

சின்னச்சாமியுடன் அவரது 16 வயது மகள் வசித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு குடி போதையில் வீட்டுக்கு வந்த சின்னச்சாமி தனது மகள் என்றும் பாராமல் அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்துள்ளார்.

அதன் பிறகு பள்ளிக்கு சென்று வந்த மகளின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படவே அக்கம் பக்கத்தில் இருந்தவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. எனவே இது குறித்து தாண்டிக்குடி போலீசாருக்கு புகார் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியதில் சின்னச்சாமி தனது மகளை கற்பழித்த விபரம் தெரிய வந்தது. கடந்த 2015-ம் ஆண்டு அந்த சிறுமிக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. போலீசார் சின்னச்சாமியை கைது செய்தனர்.

இந்த வழக்கு திண்டுக்கல் மாவட்ட மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கருணாநிதி மகளை கர்ப்பிணியாக்கிய சின்னச்சாமிக்கு சாகும் வரை சிறை தண்டனையும், ரூ.2500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழ்நாடு பாதிக்கப்பட்டோர் இழப்பீடு திட்டத்தின் கீழ் விசாரித்து நிவாரணம் பெற்று தருமாறு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?..!!
Next post சுய இன்பம் சரியா?… தவறா?… தெரிஞ்சிக்கிட்டு என்ஜாய் பண்ணுங்க…!!