சாதி மாறி திருமணம்: கர்ப்பிணி பெண்ணை குடும்பமே உயிரோடு எரித்து கொன்ற கொடூரம்..!!

Read Time:3 Minute, 3 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)இந்தியாவில் தலித் சாதி இளைஞரை திருமணம் செய்ததால் இஸ்லாமிய கர்ப்பிணி பெண்ணை அவர் குடும்பமே சேர்ந்து உயிரோடு எரித்துக் கொன்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவின் Gundakanala கிராமத்தில் பானு பேகம்(21) என்ற இஸ்லாமிய பெண் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

அதே பகுதியில் வசிக்கும் Sayabanna Sharanappa (24) என்னும் தலித் இளைஞருடன் பானுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது.

பானுவின் காதல் பற்றி குடும்பத்தினருக்கு தெரியவரவே, சாதியை காரணம் காட்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பானுவை கடுமையாக தாக்கியதுடன், பொய்யான தகவல்களை கூறி Sayabanna Sharanappa மீது பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதற்கிடையே பானுவும், Sayabannaவும் வீட்டுக்கு தெரியாமல் கடந்த ஜனவரி 24ஆம் திகதி கோவாவுக்கு தப்பிச் சென்றுள்ளனர்.

பின்னர், இருவரும் பிப்ரவரி மாதம் திருமணம் செய்து கொண்டு கோவாவில் தங்கள் வாழ்க்கையை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பானு கர்ப்பமடைந்தார், இதனைத்தொடர்ந்து தங்கள் திருமணத்தை இனி இரு குடும்பத்தாரும் ஏற்றுக் கொள்வார்கள் என நினைத்த தம்பதிகள் சொந்த ஊருக்கு சென்று பெற்றோரை சந்தித்துள்ளனர்.

ஆனால் பானுவின் குடும்பமும் Sayabannaவின் குடும்பமும் திருமணத்தை ஏற்காமல் இருவரையும் பிரிந்து விட சொல்லி மிரட்டியுள்ளனர்.

பின்னர் கடந்த சனிக்கிழமை Sayabanna தந்தை மற்றும் பானுவின் தாய், சகோதரர், சகோதரி ஆகியோர் சேர்ந்து Sayabannaஐ கடுமையாக தாக்கியுள்ளனர்.

அங்கிருந்து எப்படியோ தப்பித்து காவல் நிலையத்துக்கு சென்ற Sayabanna இதுகுறித்து புகார் அளித்துள்ளார்.

ஆனால் அந்த சமயத்தில் தனியாக வீட்டில் மாட்டிக் கொண்ட பானுவை கடுமையாக தாக்கியதுடன், உயிரோடு தீ வைத்து எரித்துள்ளனர்.

இதுகுறித்து உயர் பொலிஸ் அதிகாரி Patil கூறுகையில், இந்த சம்பவம் தொடர்பாக பானுவின் தாய், சகோதரர், சகோதரியை கைது செய்துள்ளோம்.

மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய பானு குடும்பத்தை சேர்ந்த 4 பேரை தேடி வருகிறோம் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடித்த பெண்.. கதறி துடித்த பரிதாபம்..!! (வீடியோ)
Next post தாம்பத்தியம் நமக்குச் சொல்லித் தரும் வித்தியாசமான விஷயங்கள்..!!