பெண் காப்பாளரை கொன்ற புலி: மிருக காட்சி சாலையில் நடந்த விபரீத சம்பவம்..!! (வீடியோ)

Read Time:4 Minute, 13 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90பிரித்தானியாவில் மிருககாட்சி சாலையில் விலங்குகளை பராமரிக்கும் வேலை செய்த பெண்ணை அங்குள்ள புலி காயப்படுத்தி கொன்றுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் Huntingdon நகரில் Hamerton என்ற மிருககாட்சி சாலை அமைந்துள்ளது. இங்கு Rosa King (33) என்னும் பெண் விலங்குகளை பராமரிக்கும் பணியை செய்து வந்தார்.

இந்நிலையில் அங்கிருந்த புலியின் கூண்டுக்குள் நின்று கொண்டிருந்த Rosaவை புலி ஒன்று காயப்படுத்திக் கொன்றுள்ளது.

இது குறித்து Rosa அம்மா Andrea King கூறுகையில், என் மகள் விலங்குகளை பராமரிக்கும் இந்த வேலையை மிகவும் விரும்பி செய்தாள்.

இதை தவிர அவர் வேறு வேலையை செய்ய விரும்பியதில்லை என சோகத்துடன் கூறியுள்ளார்.

Chisholm (59) என்னும் நபர் கூறுகையில், இந்த பூங்காவே Rosaவால் சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது.

இந்த பூங்காவின் மைய புள்ளியாக அவர் தான் இருந்தார், மிருகங்களின் மீது அவர் மிகுந்த அன்பு வைத்திருந்தார் எனவும் Rosaவுக்கு பிடித்த மிருகம் சிறுத்தை எனவும் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் நடந்த போது பூங்காவில் தனது குடும்பத்துடன் இருந்த Peter Davis என்னும் நபர் கூறுகையில், நாங்கள் பூங்காவில் இருந்த போது திடீரென ஒரு இடத்தில் அலறல் சத்தம் கேட்டது.

அப்போது, எங்கள் அருகில் ஒருவர் பதட்டத்துடன் ஓடினார். அவர் யாருக்கோ உதவி கேட்டு ஓடுகிறார் என நினைத்தோம்.

ஆனால், அது Rosaவை புலியிடமிருந்து காப்பாற்ற செய்த செயல் என அப்போது எனக்கு தெரியாது என கூறியுள்ளார்.

பின்னர், பூங்கா ஊழியர்கள் 6 பேர் சம்பவ இடத்துக்கு சென்றதாகவும் பின்னர் அவர்கள் மாமிச துண்டை புலிக்கு போட்டு அதை திசை திருப்ப முயற்சி செய்ததாகவும் Peter தெரிவித்துள்ளார்.

ஆனால் இந்த விடயங்களால் Rosaவை புலியிடமிருந்து யாராலும் காப்பாற்ற முடியவில்லை.

இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும் போதே பூங்காவில் இருந்த பார்வையாளர்களை அங்கிருந்து வெளியேற பூங்கா நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் கூறுகையில், இது விபத்து தான். இதில் சந்தேகப்படும் படியான விடயங்கள் ஏதும் இல்லை.

Rosaவின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னரே மற்றவைகள் தெரியவரும் என கூறியுள்ளனர்.

Hamerton பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவத்தின் போது வேறு எந்த மிருங்களும் இங்கிருந்து தப்பி செல்லவில்லை.

மேலும், அங்கிருந்த பொது மக்களின் பாதுகாப்புக்கு எந்த பங்கமும் வரவில்லை.

இது ஒரு விபத்து தான், இதற்கு தங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்வதாக கூறப்பட்டுள்ளது.

Rosa இருந்த கூண்டில் மொத்தம் எத்தனை புலிகள் இருந்தது என்ற தகவல் இன்னும் தெரியவில்லை.

இந்நிலையில், Hamerton விலங்குகள் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பளத்தைவிட கதாபாத்திரம் முக்கியம்: ஐஸ்வர்யா ராஜேஷ்..!!
Next post இவரைத்தான் திருமணம் செய்யப் போகிறாரா பிரபாஸ்?..!!