அல்-காய்தாவின் 2-ம் நிலை தலைவர் இராக்கில் கைது

Read Time:1 Minute, 35 Second

Al.Haida.1.jpgஇராக்கில் அல் காய்தா தீவிரவாத இயக்கத்தில் இரண்டாவது இடம் வகிக்கும் ஹமீது ஜுமா அல் சயிதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரைக் கடந்த ஜூன் மாதத்திலேயே பிடித்து வைத்திருந்ததாக இராக் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

சயிதியின் கட்டளையின் பேரில்தான், சமராவில் ஷியா பிரிவினரின் வழிபாட்டுத் தலம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம், ஷியா-சன்னி பிரிவினரிடையே நாடுதழுவிய அளவில் கலவரம் ஏற்படக் காரணமாக அமைந்தது. அந்தக் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர் என்று அவர் மேலும் கூறினார்.

ஈராக்கில் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராக இருந்த அபு முசாப் அல்சர்காலி கடந்த ஜுன் மாதம் அமெரிக்க படையினரால் கொல்லப்பட்டதை தொடர்ந்து அமீது ஜுமா அல்சயீதி தான் தலைவனாக செயல்பட்டான். இவன் பில்லேடனின் நெருங்கிய கூட்டாளி. ஈராக்கில் சமாரா நகரில் ஷியா முஸ்லிம் மசூதி உள்ளிட்ட மசூதிகளை குண்டு வைத்து தகர்த்து ஏராளமாணவர்களை கொன்றவன் இவன்தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post அமெரிக்க ஓபன் டென்னிஸ்: மவுரஸ்மோ, ஷரபோவா 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்
Next post பா.ம.க. மிரட்டல்: குஷ்பு படப்பிடிப்புக்கு போலீஸ் பாதுகாப்பு