பெண்களே! நீங்கள் புடவையில் அழகாக தெரிய வேண்டுமென்றால்… அணியும் போது இந்த தவறுகளை செய்யாதீங்க…..!!
நம் நாட்டின் பாரம்பரிய உடை தான் புடவை. தற்போதைய தலைமுறையினர் பலருக்கும் புடவை அணியவே தெரியாது. இதற்கு காரணம் மேற்கத்திய கலாச்சாரம் நம் நாட்டிற்கு புகுந்தது தான். இதனால் உடுத்தும் புடவையிலும் சில மாற்றங்களைக் கொண்டு வந்து, புடவையின் அழகையே பாழாக்கிவிடுகின்றனர். எனவே புடவையில் அம்சமாக காட்சியளிக்க வேண்டுமானால், புடவை அணியும் போது நினைவில் கொள்ள வேண்டிய மற்றும் தவிர்க்க வேண்டிய சில தவறுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, இனிமேலாவது புடவையை சரியாக உடுத்துங்கள்.
அளவுக்கு அதிகமான ஆபரணங்கள்
புடவையில் அழகாக காட்சியளிக்க விரும்பினால், அதற்கு அதிகமான அளவில் ஆபரணங்களை அணிய வேண்டும் என்பதில்லை. சொல்லப்போனால், அப்படி அதிகமாக ஆபரணங்கள் அணிந்தால், அது தோற்றத்தையே பாழாக்கிவிடும். வேண்டுமானால், புடவைக்கு முத்துக்கள், கற்கள் அல்லது சிறிய பென்டென்ட் செட்டுகள் போன்று அணியலாம்.
உடுத்தும் முறை
புடவையை அணியும் போது, தொப்புளுக்கு மிகவும் கீழேயோ அல்லது மேலேயோ அணியக்கூடாது. இதுவும் புடவையின் தோற்றத்தையே பாழாக்கும். எனவே சரியான அளவில் பாவாடையை கட்டி உடுத்துங்கள்.
ஹேண்ட் பேக்குகள்
புடவையை அணிந்தால் கட்டாயம் ஹேண்ட் பேக்குகளை கொண்டு செல்ல வேண்டும் என்பதில்லை. ஒருவேளை ஹேண்ட் பேக் வேண்டுமானால், மிகப்பெரிய அளவிலான ஹேண்ட் பேக்குகளைத் தேர்ந்தெடுக்காமல், சிறிய அளவிலானதை தேர்ந்தெடுத்து கொண்டு செல்லுங்கள்.
தவறான காலணிகள்
புடவையை அணியும் போது, தட்டையான செருப்புக்களை அணிவதைத் தவிர்க்க வேண்டும். இது புடவையில் உங்களது தோற்றத்தையே மோசமாக காட்டும். ஆகவே சற்று உயரமான, அதுவும் ஒரளவு ஹீல்ஸ் கொண்ட காலணியை அணியுங்கள்.
உள்பாவாடை
புடவையை அணியும் போது உடுத்தும் உள் பாவாடை, புடவையின் நிறத்திற்கு பொருத்தமாக இருக்குமாறு பார்த்து தேர்ந்தெடுத்து உடுத்த வேண்டும். இல்லாவிட்டால், அதுவே உங்கள் புடவையின் அழகு மட்டுமின்றி, உங்களையும் சங்கடத்திற்கு உள்ளாக்கும்.
பிரா ஸ்ட்ராப்கள்
எவ்வளவு தான் பிரா ஸ்டைலாக இருந்தாலும், புடவையில் அது தெரிந்தால், கேவலமாக இருக்கும். எனவே ஜாக்கெட்டுக்களை அணியும் போது, அதை சரியாக உள்ளே தள்ளிக் கொள்ளுங்கள்.
ஜாக்கெட்டுகள்
புடவையில் ஒருவரை அழகாக காண்பிப்பதில் ஜாக்கெட் முக்கிய பங்கை வகிக்கிறது. எனவே அணியும் ஜாக்கெட் மிகவும் தளர்ந்து இல்லாமல், சரியான அளவில் இருக்குமாறு தைத்து உடுத்துங்கள். அதேப் போல் புடவைக்கு ஏற்ற ஸ்டைலில் ஜாக்கெட்டுகளைத் தைத்து போடுங்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating