கேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இதுதான்..!!

Read Time:3 Minute, 40 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (2)கேரளத்து பெண்கள் என்றாலே நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம் இவைகள் தான் ஞாபகத்துக்கு வரும்.

இதற்கு அவர்களின் அழகு பராமரிப்புதான் காரணம். அந்த மாநிலம் இயற்கை வளங்களால் சூழப்பட்டதும் இப்பெண்களின் அழகுக்கு காரணம் ஆகும்.

தேங்காய் எண்ணெய்

கேரளத்து பெண்கள் தினமும் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவார்கள். அதிலும் தினமும் தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடிபட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.

மஞ்சள்

சருமம் மென்மையாக இருப்பதற்கு காரணம், மஞ்சள் பயன்படுத்துவது தான். தினமும் குளிக்கும் போது மஞ்சளை உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.

கற்றாழை

முக்கியமாக தினமும் குளிப்பதற்கு முன் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைப்பார்கள். இதனால் தான் அவர்களின் முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுத்தமாக உள்ளது.

காஜல்

கேரளத்து பெண்களின் கண்கள் பளிச்சென்று அழகாக காணப்படுவதற்கு காரணம், அவர்கள் தங்களின் கண்களுக்கு காஜலை அதிகம் பயன்படுத்துவார்கள்.

அதிலும் கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த காஜலை அல்ல, வீட்டிலேயே காஜல் செய்து அதனைப் பயன்படுத்துவார்கள்.

கடலை மாவு

கடலை மாவு கொண்டுவாரம் ஒருமுறையாவது ஃபேஸ் பேக் போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணம்.

செம்பருத்தி

கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் இதுதான். அது என்னவெனில் இவர்கள் தங்களின் கூந்தலுக்கு ஷாம்புவிற்குபதிலாக, செம்பருத்திப் பூ மற்றும் அதன் இலையை அரைத்து, அவற்றைக் கொண்டு கூந்தலை அலசுவார்கள்.

கறிவேப்பிலை

பொடுகு வராமல் இருப்பதற்கு, இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை அலசுவார்கள்.

சிவப்பு சந்தனம்

இதுதான் இருப்பதிலேயே முக்கியமானது. கேரளத்து பெண்கள் தினமும் இரவில் படுக்கும் போது, சிவப்பு சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள். இதனால் தான் அவர்களின் முகம் கொழுகொழுவென்று அழகாக உள்ளது.

சீகைக்காய்

ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காயை அரைத்து, அவற்றையும் பயன்படுத்துவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தவறான நபருடன் உறவில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்தும் 7 அறிகுறிகள்..!!
Next post தினம் ஒரு ஆணுடன் உறவு: அதிர்ச்சி ஏற்படுத்தும் கலாசாரம்..!! (வீடியோ)