சோப், பாடிவாஷ் யாருக்கு எது பெஸ்ட்?..!!

Read Time:3 Minute, 28 Second

201705201018476031_which-is-best-for-soap-and-body-wash_SECVPFதினமும் எல்லோரும் பயன்படுத்தும், இன்றியமையாத ஒன்றாக ஆகிவிட்டது சோப். சோப்பில்லாமல் குளித்தால், குளித்தது போன்ற உணர்வே ஏற்படுவது இல்லை. அந்த அளவுக்கு சோப் நம் அன்றாட வாழ்வில் பழகிவிட்டது. தற்போது இதைப் பயன்படுத்துவதிலும், சில நடைமுறைச் சிக்கல்கள் இருக்கின்றன. இது அனைவருக்கும் ஏற்றுக்கொள்வது இல்லை. அதனால்தான் இப்போதெல்லாம் பாடிவாஷ் பயன்படுத்தச் சொல்லி அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

பாடிவாஷில் உள்ள பி.ஹெச் அளவைவிட, சோப்பில் உள்ள பி.ஹெச் அளவு அதிகம். இது சிலரது சருமத்துக்கு ஒத்துக்கொள்ளாது. சருமத்தில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை, அதிதீவிர ரசாயனங்கள் கலந்த சோப் நீக்கிவிடும். அதுபோல, இயற்கையாகவே சருமத்தில் சுரக்கும் எண்ணெயும் சோப் பயன்படுத்துவதால் நீங்கிவிடும். இதனால் சருமம் வறட்சியாகிவிடும்.

பாடிவாஷிலோ, பி.ஹெச் அளவு மிதமானதாக இருக்கும். சருமத்தைப் பெரிதாக பாதிக்காது; ஈரப்பதத்தை நீக்காது; சருமம், மென்மையாகவும் மிருதுவாகவும் இருக்க பாடிவாஷ் உதவும்.

‘எக்ஸிமா, சொரியாசிஸ், வறட்சியான சருமம் போன்ற பிரச்னைகள் உள்ளவர்கள் சோப் பயன்படுத்தாமல், பாடிவாஷ் பயன்படுத்துவதே நல்லது’ என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம். ஏனெனில், பாடிவாஷில் உள்ள மாய்ஸ்சரைசர், சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை மீட்டெடுத்துவிடும்.

பாடிவாஷ் பயன்படுத்துவதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. அதாவது, நிறைய பிராண்ட்கள் பாடிவாஷுடன் லூஃபா (Luffa scrub) என்கிற ஸ்க்ரப்பரைத் தருகின்றனர். இதை யாருமே பயன்படுத்தக் கூடாது. இந்த ஸ்க்ரப்பரைத் தேய்க்கத் தேய்க்க, சருமம் வெள்ளையாக மாறுவதுபோல தோன்றலாம்.

ஆனால், சருமத்தின் மேற்பரப்பில் உள்ள படிமங்களை உரித்துவிடும் (Peel). சருமத்தைப் பாதுகாக்கும் படிமங்கள் நீக்கப்பட்டால், சூரியஒளி நேரடியாக சருமத்தில் படும். எனவே, ஸ்க்ரப்பரை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. இந்த நிலையில் சருமத்துக்கு நிரந்தரமான கறுப்புப் படிமம் (Permanent pigmentation) ஏற்பட்டுவிடலாம். அதை நீக்குவதும் கடினம்.

கடைகளில் ஆயுர்வேதிக், ஆர்கானிக் எனப் பல வகைகளில் ஸ்க்ரப்பர்கள் கிடைக்கின்றன. எந்த வகை ஸ்க்ரப்பராக இருந்தாலும், அவற்றைப் பயன்படுத்த வேண்டாம். கைகளால் தேய்த்துக் குளிக்கும் முறையையே மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றோம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆணுறைகளின் பயன்பாடும் செயல்திறனும் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியவை..!!
Next post கேரளாவில் கற்பழிக்க முயன்ற சாமியாரின் பிறப்பு உறுப்பை துண்டித்த இளம்பெண்..!!