வைகாசி மாதத்தில் பிறந்தவர்களுக்கு இவ்வளவு சிறப்புகளா?..!!

Read Time:4 Minute, 10 Second

vaikasi_month001.w245ஆயுள், செல்வம், புத்திரப்பேறு போன்ற அனைத்தையும் அளிக்கக் கூடிய மாதம் வைகாசி என்பதால் வைகாசி மாதம் நல்ல காரியங்கள் செய்ய ஏற்ற மாதமாக கருதப்படுகிறது.

எனவே இவ்வளவு சிறப்பு மிகுந்த வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள் எப்படி இருக்கும் என்பதை பற்றி பார்ப்போம்.

வைகாசி மாதத்தில் பிறந்தவர்களின் குணநலன்கள்

இந்த மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் எளிதில் புரிந்து கொள்பவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு ஞாபகசக்தி அதிகமாக இருக்கும். இவர்கள் யோசனைகள் செய்வதில் சிறந்தவர்கள். இவர்களின் பலம் பொறுமை தான்.

மேலும் இவர்கள் இடம், பொருள், ஏவல் பார்த்து பேசுவதில் வல்லமை மிக்கவர்கள்.

இவர்களுக்கு இயற்கையிலேயே வசீகரத் தோற்றம், வாசனை திரவியங்கள் மீது பற்றுதல், உயர்தர ஆடை, ஆபரணங்கள் அணிவதில் பிரியம் இருக்கும்.

இவர்கள் எந்த வேலையில் ஈடுபட்டாலும் அடி முதல் நுனி வரை தெரிந்து வைத்திருப்பார்கள். வருத்தம், கோபம் எதுவாக இருந்தாலும் அதை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாத குணத்தை கொண்டவர்கள்.

குடும்பம்

குடும்பத்தில் இவர்களின் பங்கு அதிகம் இருக்கும். உற்றார், உறவினர், உடன்பிறப்பு என்று அனைவரையும் அனுசரித்து போவார்கள். ஆனால் சில விஷயங்களில் பிடிவாதமாக இருப்பார்கள். குற்றம், குறைகளை சரியான நேரத்தில் சுட்டிக் காட்ட தயங்க மாட்டார்கள்.

இவர்கள் கையில் எப்பொழுதும் பணம் புரண்டு கொண்டே இருக்கும். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவழிக்க தயங்க மாட்டார்கள்.

ஆரோக்கியம்

உஷ்ணம், வயிற்றுக் கோளாறுகள் அடிக்கடி உண்டாகும். ரத்த சம்பந்தமான குறைபாடுகள் இருக்கும். சைனஸ், தும்மல், ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட நேரிடும். முதுமையில் மறதி நோய், நரம்புத் தளர்ச்சி பிரச்சனைகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது.

பயணங்கள்

பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள். பக்தி சுற்றுலாக்கள், புனித ஸ்தலங்களுக்கு செல்வது மிகவும் பிடிக்கும். உல்லாசப் பயணங்களிலும் விருப்பம் உடையவர்கள். தனிமையை விரும்புவர்கள், இயற்கை கலையை, அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

திருமணம்

நல்ல ஆற்றலும், நிர்வாகத் திறமையும் உள்ள பெண் அல்லது ஆண் இவ்ரகளுக்கு வாழ்க்கைத் துணையாக அமைவார்கள். சில சமயங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

புதன், செவ்வாய், சுக்கிரன் அனுகூலமாய் இருக்கப் பிறந்தவர்களுக்கு துணையின் மூலம் உயர்ந்த பதவி, புகழ், செல்வம், செல்வாக்குள்ள துணை அமைவதற்கான யோகமும் உள்ளது.

தொழில்

தொழில், வேலைவாய்ப்பு, வியாபாரம் ஆகியவற்றில் நிர்வாகத் திறமை நிறைந்தவர்களாக இருப்பார்கள். கலைத்துறையில் சாதனை புரியும் யோகமும் உள்ளது.

இவர்கள் சிறந்த பேச்சாளர்களாகவும், எழுத்தாளர்களாகவும், பதிப்பகங்களை நடத்துபவராகவும், அச்சகத் தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரத்த சோகையை குணமாக்கும் பேரீச்சம் பழம்..!!
Next post உடலுறவில் உச்சமடைந்த பின் என்னவெல்லாம் நடக்கும்?..!!