குழந்தையை கடத்தியதாக நடிகை வனிதா மீது கணவர் திடீர் புகார்..!!

Read Time:2 Minute, 8 Second

201705191245105492_Actress-vanithas-husband-complaint-against-her_SECVPFநடிகர் விஜயகுமாரின் மூத்த மகள் நடிகை வனிதா. இவர் டி.வி. நடிகர் ஆகாசை முதலில் காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு மகன், மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வனிதா, ஆகாசிடமிருந்து விவாகரத்து பெற்றார்.

பின்னர் அவர் ஆந்திராவை சேர்ந்த தொழில் அதிபர் ஆனந்தராஜ் என்பவரை மணந்தார். இவர்களுக்கு 3-ம் வகுப்பு படிக்கும் 8 வயதில் மகள் உள்ளார்.

2012-ம் ஆண்டு கருத்து வேறுபாட்டால் ஆனந்த ராஜிடம் இருந்தும் வனிதா விவாகரத்து பெற்றார். ஆகாசிடம் இரு குழந்தைகளும் ஆனந்தராஜிடம் ஒரு குழந்தையும் பராமரிப்பில் உள்ளனர்.

இதையடுத்து வனிதா, நடிகை அல்போன்சாவின் சகோதரர், ராபர்ட் என்பவருடன் காதல் வயப்பட்டு மணந்தார். ராபர்ட்டை நடிகராக அறிமுகம் செய்து “எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல், ரசிகர் மன்றம்“ என்ற படத்தை தயாரித்து இயக்கினார். பின்னர் இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஐதராபாத்தில் வசித்து வரும் ஆனந்தராஜ், தனது குழந்தையை வனிதா கடத்தி சென்று விட்டதாக ஆல்வால் போலீசில் புகார் செய்து உள்ளார். அதில் திடீரென வீட்டுக்கு வந்த வனிதா குழந்தையை கடத்தி சென்று விட்டார் என்று தெரிவித்து இருக்கிறார்.

நடிகை வனிதா கோவை புறநகர் பகுதியில் தங்கி இருப்பதாக தெரிகிறது. அவரிடம் இருந்து குழந்தையை மீட்க ஆந்திரா போலீசார் கோவைக்கு விரைந்து உள்ளனர்.

நடிகை வனிதா குழுந்தையை கடத்தி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஊடகங்கள் நல்லிணக்கத்துக்காக உழைக்கின்றனவா?..!! (கட்டுரை)
Next post பேஸ்புக் நேரலையில் துப்பாக்கியால் தோழியை கொலைசெய்த 13 வயது சிறுவன்..!! (வீடியோ)