மனைவியை கற்பழிக்கலாம்.. அடிக்கலாம்! பெண்களுக்கு எதிராக இப்படி மோசமான சட்டங்கள் இருப்பது தெரியுமா?..!!

Read Time:6 Minute, 42 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70 (1)சர்வதேச அளவில் ஆண் பெண் சமம், இருபாலினரின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கப்பட வேண்டும் என ஐ.நா சபை முதல் உலக தலைவர்கள் வரை கூறி வந்தாலும், பெண்களுக்கு எதிரான சட்டங்கள் தற்போதைய காலத்திலும் நடைமுறையில் இருப்பது வேதனை அளிக்கும் விடயமாகும்.

சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமைகளை ஏற்படுத்த வேண்டும், பெண்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளை பறிக்கும் சட்டங்களை நீக்க வேண்டும் என 189 நாடுகள் ஒன்றாக ஒப்புதல் அளித்தனர்.

இந்த திட்டத்திற்கு Beijing Platform for Action என பெயரும் சூட்டப்பட்டது. ஆனால், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு 20 ஆண்டுகள் ஆன நிலையிலும் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் இன்றளவும் பல நாடுகளில் நடைமுறையில் இருந்து வருகிறது.

மனைவியை கணவன் சட்டப்பூர்வமாக அடிக்கலாம்

பாகிஸ்தான் நாட்டில் கணவனின் வார்த்தைகளுக்கு கட்டுப்படாத மனைவியை அடிப்பதற்கு நாடாளுமன்றத்தில் சட்டபூர்வமாக ஒரு மசோதா கொண்டு வரப்பட்டது. இந்த மசோதா இன்றும் நிலுவையில் உள்ளது.

கணவனின் உத்தரவுக்கு கீழ் படியாமல் இருப்பது, கணவனின் விருப்பத்தின் அடிப்படையில் உடை அணியாமல் இருப்பது, மாதவிடாய் நாட்களில் உடலுறவுக்கு மறுப்பது அல்லது மாதவிடாய் நாட்களுக்கு பிறகு குளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களுகாக மனைவியை சட்டப்பூர்வமாக அடிப்பதற்கு அந்த மசோதா அனுமதி அளிக்கிறது.

நைஜீரியா நாட்டில் தவறு செய்த மனைவியை கணவன் சட்டப்பூர்வமாக அடிக்கலாம். ஆனால், காயம் ஏற்படும் விதத்தில் அடிக்க கூடாது. இச்செயலை செய்யும் கணவனுக்கு அந்நாட்டில் எவ்வித தண்டனையும் கிடையாது.

மனைவியை கணவன் சட்டப்பூர்வமாக கற்பழிக்கலாம்

சில நாடுகளில் உடலுறவுக்கு விருப்பம் இல்லாத மனைவியை கணவன் கற்பழிப்பதில் குற்றம் இல்லை. உதாரணத்திற்கு, இந்தியாவில் 2013-ம் ஆண்டு சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டது. அதில், மனைவிக்கு 15 வயதிற்கு மேல் இருந்தால் அவர் விருப்பம் இல்லாமல் கற்பழிக்கலாம்.

இதேபோல், பஹாமாவில் 14 வயதிற்கு மேல் உள்ள மனைவி மற்றும் சிங்கப்பூரில் 13 வயதிற்கு மேல் உள்ள மனைவியை விருப்பம் இல்லாமல் கூட கற்பழிக்கலாம் என சட்ட மசோதா கொண்டு வரப்பட்டது.

பெண்ணை கடத்தி திருமணம் செய்யலாம்

லெபனான் நாட்டில் ஒரு ஆண் ஒரு பெண்ணை கடத்தி கற்பழித்த பின்னர் அவரையே திருமணம் செய்துக்கொண்டால் அந்த ஆண் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது. மால்டா நாட்டிலும் ஒரு பெண்ணை கடத்தி, கற்பழித்த பின்னர் அவரையே திருமணம் செய்துக்கொண்டால் அந்த ஆணுக்கு மிகவும் குறைவான தண்டனையே வழங்கப்படும்.

மனைவியை கொலை செய்தாலும் கணவனுக்கு தண்டனை குறைவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான எகிப்தில் துரோகம் செய்த மனைவியை கணவன் கொலை செய்யலாம். இதற்கு கணவனுக்கு குறைவான தண்டனை மட்டுமே கிடைக்கும்.

இதேபோல், சிரியா நாட்டிலும் துரோகம் செய்த மனைவி, தாயார், சகோதரர், சகோதரியை கொலை செய்யும் நபருக்கு 7 ஆண்டுகள் மட்டுமே சிறை தண்டனையாக விதிக்கப்படும்.

கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியே செல்ல முடியாது

ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமன் ஆகிய நாடுகளில் கணவனின் அனுமதி இல்லாமல் மனைவி வெளியே செல்லக் கூடாது என்பது சட்டமாகும். அதாவது, ஒரு பெண் திருமணம் செய்து கணவனின் வீட்டிற்கு சென்ற பிறகு அவரது அனுமதி பெற்றுக்கொண்டு தான் வெளியே செல்ல வேண்டும்.

மனைவி எங்கு வேலை செய்ய வேண்டும் என கணவன் தான் தீர்மானிப்பார்

கமெரூன் மற்றும் கினியா ஆகிய நாடுகளில் ஒருவரின் மனைவி எங்கு, எந்த நிறுவனத்தில், எந்த பணியை செய்ய வேண்டும் என்பதை அவரது கணவன் மட்டுமே தீர்மானிப்பார்.

மனைவி விவாவகரத்து பெற முடியாது

இஸ்ரேல் நாட்டில் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டாலும் கூட மனைவி விவாகரத்து கோர முடியாது, எந்த பிரச்சனை என்றாலும் கணவன் விவாகரத்து கோரினால் மட்டுமே இருவரையும் நீதிமன்றம் பிரித்து விடுதலை செய்யும்.

பெண்கள் வாகனங்களை இயக்க முடியாது

சவுதி அரேபியா நாட்டில் பெண்கள் அனைவரும் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒரு பிரபலமான சட்டமாகும். இதுமட்டுமில்லாமல், பெண்களுக்கு அதிகாரப்பூர்வமாக ஓட்டுனர் உரிமம் கூட வழங்கப்பட மாட்டாது.

ஆண்களுக்கு நிகராக பெண்கள் சொத்துரிமையை பெற முடியாது

துனிசியா நாட்டில் பெற்றோர்களின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு இரண்டு மடங்கு சொத்தும், பெண்களுக்கு அதில் பாதியளவு சொத்து மட்டுமே இன்றளவும் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனுஷ், விஜய் இருவருமே ஒரே கதாபாத்திரத்தில் நடிக்கிறார்களா?..!!
Next post 20 ஆண்டுகளாக விமானியாக இருந்து கொண்டே ஆட்சி நடத்தும் மன்னர்: சுவாரஸ்ய சம்பவம்..!!