விமானப் பயணத்தில் பிறந்தநாள் கேக் எடுத்துச் செல்ல அனுமதி மறுப்பு: கண்ணீர் விட்டு அழுத குடும்பத்தினர்..!! (வீடியோ)

Read Time:1 Minute, 51 Second

C_xZ0M8UIAAY3Mvஅமெரிக்காவில் பிறந்த நாள் கேக் எடுத்துச் செல்ல அனுமதி மறுத்து ஒரு குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டதால் அவர்கள் மனமுடைந்து அழுதுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து லாஸ்வேகாஸ்-க்கு செல்வதற்கு கேமரூன்-மின்டா புர்கே தம்பதிகள் தங்கள் இரண்டு குழந்தைகளுடன் சென்றுள்ளனர்.

அப்போது மின்டா புர்கே-வின் 40-வது பிறந்த நாள் என்பதால், அவர்கள் தங்களுடன் பட்டர் கேக் ஒன்றை கொண்டுவந்துள்ளனர்.

அதற்காக அவர்கள் வாங்கிய கேக்கை, பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்க முயன்றபோது, அதை இருக்கைக்கு அடியில் வைக்குமாறு விமானப் பணிப் பெண் ஒருவர் கூறியுள்ளார்.

அச்சமயம், அதட்டலாகப் பேசிய மற்றொரு பணிப்பெண்ணிடம் கேமரூன் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

விமானக் குழுவால் வரவழைக்கப்பட்ட பொலிசார், விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, குடும்பத்தினர், மனமுடைந்து அழுதனர்.

தம்பதியை விசாரித்த பொலிசார், பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி, கேக் எடுத்துச் சென்ற குடும்பத்தினரை விமானத்தில் இருந்து இறக்கிவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதை செய்தால் தேமல் பிரச்சனையே வராது..!!
Next post லண்டன் விமான நிலையத்தில் பாகிஸ்தான் விமானத்தில் அதிகாரிகள் சோதனை..!!