ஆண்கள் பெண்களை தொட்டு பேசுவதால் ஏற்படும் விபரீதம் பற்றி தெரியுமா..?..!!
இன்றைய காலகட்டத்தில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே வருகிறது.
படித்த படிப்பை வீணாக்க வேண்டாம் என்ற எண்ணத்தில் சிலர் வேலைக்கு செல்வதாக எடுத்துக்கொண்டாலும் அதில் குடும்ப பொருளாதார தேவையும் உள்ளடங்கி இருக்கிறது. கணவன்-மனைவி இருவரும் வேலைக்கு சென்றால்தான் குடும்பத்தை வழிநடத்தி செல்ல முடியும் என்ற நிர்பந்தம் நகர்புற வாழ்க்கையில் தவிர்க்க முடியாததாகிறது. அதிலும் குழந்தை பிறந்துவிட்டால் அதனை வளர்த்து ஆளாக்குவதற்காக சம்பாதிக்க வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.
அலுவலக பணிகளில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வேலை பார்ப்பது தவிர்க்க இயலாத விஷயமாக இருக்கிறது. அத்தகைய சூழலில் பெண்கள் பல்வேறு விதமான சிரமங்களை அனுபவிக்க வேண்டியிருக்கிறது.
சக ஆண் ஊழியர்களை எப்படி அணுகுவது, எப்படி பழகுவது?
பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்? என்பது போன்ற விஷயங்களில் விழிப்புடன் இருப்பது பிரச்சினைகள் வராமல் தங்களை தற்காத்து கொள்ள உதவும்.
ஆண் ஊழியர்களிடம் பணி சார்ந்த விஷயங்களை பகிர்ந்து கொண்டிருக்கும்போது பேச்சு வேறு எதிலும் திசை திரும்பாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தேவையில்லாத பேச்சுக்களின் தொடக்கமே பிரச் சினைகள் உருவாக அடித்தளமாக அமையும்.
முக்கியமாக உங்களுடைய குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டாதீர்கள். அவர்கள் அனுதாபத்தோடு கேட்பதாக தோன்றினாலும், மனம் திறந்து பேசிவிட முயற்சிக்காதீர்கள். ஆழ்மனதில் அதுபோன்ற எண்ணம் தோன்றும்போதே உங்களின் உள்ளுணர்வுகளை நீங்களே கட்டுப்படுத்தி தடை போட்டு விடுங்கள்.
பொதுவாகவே நட்புரீதியாக யாராவது பழக தொடங்கிவிட்டாலே தங்களை பற்றிய விஷயங்களை பகிர்ந்து கொள்ளும் எண்ணங்கள் உதயமாவது இயல்புதான். அது உங்களுடைய சுய கவுரவத்திற்கு எந்தவகையிலும் பங்கம் விளைவிக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
குடும்பத்தில் எத்தகைய பிரச்சினைகள் எழுந்தாலும் அதன் தாக்கம் அலுவலகத்தில் பிரதிபலித்துவிடக்கூடாது. உங்களின் முகமே பிரச்சினைகளை வெளிப்படுத்துவதாக இருந்துவிடக்கூடாது.
ஒருபோதும் குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் ஆலோசனை கேட்க முயலாதீர்கள். அதனை அவர்கள் தங்களுக்கு சாதகமாக எடுத்துக்கொண்டு உங்களுடன் உரிமையுடன் பழக ஆரம்பித்துவிடக் கூடும்.
அலுவலகம் என்பது பணிபுரிவதற்கான இடம் மட்டுமே, உங்களது தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளையோ, குடும்ப விஷயங்களையோ அசைபோட ஏற்ற இடம் அல்ல என்பதை உணர்ந்தாலே பிரச்சினைகள் எழ இடமில்லாமல் போய்விடும்.
உங்களுடைய பொருளாதார நிலைமையையும் உடன் பணிபுரியும் ஆண் ஊழியர்களிடம் கூறாதீர்கள்.
அவர்கள் உதவி செய்ய முன்வந்து உங்களுடன் நட்பை வலுப்படுத்த முயற்சிக்கக்கூடும். அது நீங்களே உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவரை மூக்கை நுழைக்கவிட்ட கதையாகிவிடும்.
அலுவலக பணியில் நெருக்கடி ஏற்படும்போது அதனை நிதானமாக கையாளுங்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று அவசரப்படாமல் பிரச்சினையின் வீரியத்தை குறைக்கும் வகையில் எச்சரிக்கையுடன் நடப்பது அவசியம்.
சக ஆண் ஊழியர்களுடன் கை குலுக்குதல், வெளி இடங்களில் சகஜமாக பழகுதல், வாகனத்தில் ஒன்றாக செல்லுதல் போன்ற விஷயங்கள் மற்றவர் களால் கண்காணிக்கப்படுபவை என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். ஆண் ஊழியர்களுடன் கை குலுக்குவது தவறல்ல. அதற்காக எதற்கெடுத்தாலும் கைகொடுப்பது, தொட்டுப்பேசுவது கூடாது.
வெளி இடங்களில் எதேச்சையாக சந்திக்க நேரும்போது புன்னகைப்பது, நலம் விசாரிப்பது தவறல்ல. தேவையில்லாத விஷயங்களை பற்றி பேசி அரட்டை அடிப்பது, மற்றவர்கள் கவனத்தில்படும் அளவிற்கு உங்கள் பேச்சு, செயல், நடவடிக்கை அமைவது கூடாது.
சக ஆண் ஊழியர்களிடமோ, மற்ற ஆண்களிடமோ பேசும்போது கண்ணைப் பார்த்துப் பேசுங்கள். அவர்களும் உங்கள் கண்ணை பார்த்துதான் பேசுகிறார்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
உங்களின் திறமைகள் குறித்தோ, உடுத்தும் ஆடை பற்றியோ பாராட்டும்போது நன்றி தெரிவியுங்கள்.
தேவையில்லாமல் முக பாவனைகளை வெளிப்படுத்தாதீர்கள். வெட்கப்படுவதையோ, பெருமிதம் கொள்வதையோ, தொடர்ந்து அவர்களிடம் பாராட்டுகளை எதிர்பார்ப்பதையோ தவிருங்கள்.
சக ஊழியர்கள் தங்களது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ அல்லது மட்டம் தட்டி பேசுவதையோ அனுமதிக்காதீர்கள். அவர்களின் பேச்சில் வெளிப்படும் வார்த்தைகள், கண்களில் தெரியும் மாற்றங்கள் இவை இரண்டையும் வைத்தே அவர்களின் மதிப்பை எடை போட்டு பார்த்து அதற்கேற்ப பழகுங்கள். அவர்களுடனான உறவை எவ்வளவு தூரத்தில் வைக்க வேண்டும் என்பதை வரையறை செய்து விடுங்கள்.
சக ஆண் ஊழியரின் பேச்சிலோ, நடத்தையிலோ தவறான அணுகுமுறை தென்பட்டால் உடனே எதிர்ப்பு தெரிவித்துவிடுங்கள். இல்லையென்றால் அதனை சம்மதமாக எடுத்துக்கொண்டு உங்களிடம் உரிமையுடன் பழக தொடங்கிவிடக்கூடும்.
பணி இடத்தில் பெண்களுக்கு சாதகமான சட்டங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அது அதிக பாதுகாப்பை ஏற்படுத்தி தரும்.
Average Rating