மோடிக்கு ’56 இஞ்ச் பிரா’ அனுப்பிய பெண்… பாகிஸ்தானை கண்டிக்காததால் முன்னாள் ராணுவ வீரர் மனைவி கோபம்..!!

Read Time:4 Minute, 42 Second

yeidhavan-review-feature-image-1hMTcef6YU0eg024kCkIEoஇந்திய ராணுவ வீரர்களின் தலையை வெட்டி அட்டூழியம் செய்த பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்காத பிரதமர் மோடிக்கு ‘56இஞ்ச் பிரா’வை(பெண்களின் உள்ளாடை) ஓய்வுபெற்ற ராணுவ வீரர் மனைவி அனுப்பியுள்ளார்.

2014ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், பா.ஜனதா ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான் அத்துமீறலில் ஈடுபட்டமாட்டார்கள், ‘56 இஞ்ச் ’அகல மார்பு இருக்கும் துணிச்சலுடன் கூறுகிறேன் என்று பிரதமர் மோடி பிரசாரம் செய்தார்.

அதை நினைவுப்படுத்தும் வகையிலும், பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பதிலடி கொடுக்காத நிலையிலும், பெண்கள் அணியும் உள் ஆடை பிரதமர் மோடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அரியானா மாநிலம், பதேபாத் நகரைச் சேர்ந்தவர் தரம்வீர் சிங். இவர் ராணுவத்தில் கடந்த 1991 முல் 2007 வரை பணியாற்றி ஹவில்தாராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரின் மனைவி சுமன் சிங்.

சமீப காலமாக, எல்லையில் அத்துமீறலில் ஈடுபடும் பாகிஸ்தான் ராணுவத்தினரின் செயல்கள் சுமன் சிங்குக்கு பிடிக்காமல், கடும் கோபத்தில் இருந்தார்.

மேலும், சமீபத்தில் இந்திய வீரர்கள் இருவரின் தலையை பாகிஸ்தான் ராணுவத்தினர் வெட்டி எடுத்த சம்பவத்தில் மிகவும் மன உளைச்சலில் இருந்தார்.

இதையடுத்து ஆட்சிக்கு வந்தால் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் பா.ஜனதா அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்து கண்டனம் தெரிவித்து கடிதமும், பிரதமர் மோடிக்கு 56 இஞ்ச் மார்பு இருப்பதை அறிந்து அவருக்கு 56 இஞ்ச் அளவு ‘பிரா’ வையும் சுமன் சிங் அனுப்பி வைத்தார்.

இது குறித்து முன்னாள் ராணுவ வீரர் தரம் வீர் சிங் நிருபர்களிடம் கூறுகையில், “

சமீபத்தில் இந்திய வீரர்கள் தலைதுண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது கண்டு எனது மனைவி கோபத்துடன் இருந்தார்.

தாய்நாட்டை காக்க மகன், சகோதரர்கள், கணவனை அனுப்ப வேண்டும். இப்போது 56 இஞ்ச் மார்பு எங்கே போய்விட்டது என புலம்பினார். இப்போது நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது.

இதையடுத்து, மோடிக்கு 56 இஞ்ச் பிராவையும், கடிதத்தையும் தபால் மூலம் அனுப்பியுள்ளோம். இது அவரை புண்படுத்தும் நோக்கில் செய்யப்படவில்லை, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீரர்கள் கொல்லப்படமாட்டார்கள் என்று ேதர்தல் நேரத்தில் மோடி கூறினார். ஆனால், இப்போது என்ன நடக்கிறது?

பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் 2013ல் இந்திய வீரர்கள் நாயக் ஹேம்ராஜ் தலைதுண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டி எனது மனைவி எழுதியுள்ளார்.

2014ம் ஆண்டுக்கு பின், எந்த ராணுவ வீரரும் தலைதுண்டித்து கொல்லப்பட மாட்டார்கள் என நம்பினோம். ஆனால் மீண்டும் நடந்துள்ளது.

எல்லையில் நடக்கும் அத்துமீறல்களை கட்டுப்படுத்த,பிரதமர் மோடி, ராணுவத்தினரை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும். ஆனால், இப்போது ராணுவத்தினர் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாமல் தவிக்கிறார்கள்.

ராணுவத்தில் நான் பணியாற்றியபோது, இருமுறை சேனா விருதை குடியரசு தலைவரிடம் இருந்து பெற்று இருக்கிறேன். எனது மகனையும் ராணுவத்துக்கு தயார் படுத்திவருகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரபாஸின் நீண்ட நாள் ஆசை நிறைவேறாமல் தான் சினிமாவிற்கு வந்தாராம்- ருசிகர தகவல்..!!
Next post ஏமாற்றிய காதலியால் 8 வருடமாக குப்பை பொறுக்கும் காதலன்..!!