மலைக்கா அரோரா – அர்பாஸ்கான் தம்பதிக்கு விவாகரத்து..!!

Read Time:1 Minute, 38 Second

201705131106599471_arb._L_styvpfபிரபல இந்தி நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ்கான். நடிகரும், தயாரிப்பாளருமான இவர், 1998-ம் ஆண்டு நடிகை மலைக்கா அரோரா மீது காதல் வயப்பட்டார். இதையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அர்கான் என்ற மகன் உள்ளான்.

நட்சத்திர தம்பதிகளான இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்து விவாகரத்து கேட்டு கடந்த ஆண்டு மும்பை குடும்பநல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு, 6 மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது. இதில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் பாந்திரா குடும்பநல கோர்ட்டில் இவர்களது மனு மீண்டும் விசாரணைக்கு ஏற்கப்பட்டது.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது அர்பாஸ்கான் மற்றும் மலைக்கா அரோரா ஆகியோர் தங்களது வக்கீல்களுடன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்மிதா சாவாஸ்கர், விசாரணை நிறைவில் இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் விவாகரத்து வழங்கி தீர்ப்பு அளித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 15-வது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்ற பெண்.. காப்பாற்ற போராடும் பரபரப்பு நிமிடங்கள்..!! (வீடியோ)
Next post இந்த 2 இடத்துல அழுத்துங்க: நடக்கும் அதிசயம் இதோ..!!