அடையாள அட்டை இருந்தால் மட்டுமே ரஜினிகாந்தை சந்தித்து போட்டோ எடுக்க முடியும்..!!

Read Time:2 Minute, 39 Second

201705131357417641_What-You-Need-To-Do-To-Get-A-Photograph-Clicked-With_SECVPFநடிகர் ரஜினிகாந்த் வருகிற 15-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார்.

முதல் கட்டமாக 15 மாவட்டங்களில் உள்ள ரஜினி ரசிகர்களை வரவழைத்து அவர்களுடன் தனித்தனியாக புகைப்படம் எடுக்க ரஜினி திட்டமிட்டுள்ளார். 15-ந்தேதி முதல் தினமும் 3 மாவட்ட ரசிகர்கள் வீதம் 5 நாட்களில் 15 மாவட்ட ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்.

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த சந்திப்பு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

ரஜினியை சந்திக்கும் ரசிகர்களுக்கு மாவட்ட வாரியாக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. யார் எந்த நாளில் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற தகவலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் குறிப்பிட்ட நாளில் சென்னை வந்து ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள் நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டாம் என்று வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

இதுகுறித்து அகில இந்திய ரஜினிகாந்த் தலைமை ரசிகர் நற்பணி மன்ற நிர்வாகிகள் வி.எம்.சுதாகர், சிவராம கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

அன்புத் தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள், மதிப் பிற்குரிய ரஜினிகாந்த்துடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள மாவட்ட வாரியாக மன்ற உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அடையாள அட்டை உள்ளவர்களுக்கு மட்டும்தான் அனுமதி. அடை யாள அட்டை இல்லாதவர்கள் கண்டிப்பாக மண்டபத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். வந்து ஏமாற்றம் அடைய வேண்டாம். அன்பு டன் ஒத்துழைக்கவும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தனது அண்ணனை வெறுப்பதாக கையில் எழுதி 13 வயது சிறுமி தற்கொலை..!!
Next post நாளை அன்னையர் தினம்: தாயை இறுதிவரை  காப்போம்..!!