கணவரை பழிவாங்க 7 ஆயிரம் நாணய தாள்களை விழுங்கிய பெண்..!!

Read Time:2 Minute, 50 Second

currency-500x500தனக்கு நேர்மை ஏமாற்றி வரும் கணவர், தான் சேமித்து வைத்த பணத்தையும் எடுத்து செலவு செய்வதைத் தடுக்க, வாழ்க்கை முழுவதற்குமென சேமித்து வைத்திருந்த 7 ஆயிரம் பவுண்ட் (9 ஆயிரம் டாலர்) கரன்ஸி நோட்டுக்களை பெண்ணொருவர் சாப்பிட்டே காலி செய்த அதிர்ச்சியூட்டும் ஆச்சரியம் கொலம்பியாவில் நிகழ்ந்துள்ளது.

தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பதை அறிந்த பின்னர், சன்திரா மிலெனா அல்மெய்டா 7 ஆயிரம் பவுண்டு நாணய தாள்களை விழுங்கிவிட்டார்.

இதன் காரணமாக, அடிவயிற்றில் வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்ட பின்னர் தான், 30 வயதான இந்த பெண்மணி நாணய தாள்களை சாப்பிட்டிருப்பது வெளிப்படையானது.

அவருடைய வயிற்றில் நாணய தாள்களை இருந்ததை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
தன்னுடைய கணவர் தனக்கு விசுவாசமாக இல்லை என்பது தெரிந்தவுடன், அல்மெய்டா இந்த பணத்தை மறைத்து வைத்துள்ளார்.

அந்த ரகசிய இடத்தை கண்டறிந்ததும், அதில் பாதி தொகையை வழங்க வேண்டும் என்று கணவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

அதற்கு பின்னர்தான், 100 டாலர் பணக்கட்டை சாப்பிட்டு விடுவது என்ற முடிவுக்கு வந்து, இத்தகைய தீவிர நடவடிக்கையில் அந்த பெண்மணி இறங்கியுள்ளார்.
அவரது உடலை சோதனை செய்த பின்னர், இவ்வளவு நாணய தாள்களை அவர் சாப்பிட்டுள்ளதை உறவினர்களும், மருத்துவர்களும் அறிய வந்தனர்.

வயிற்றை கீறி, 57 நூறு டாலர் பணநோட்டுக்களை எடுத்துவிட்டதாக சன்தான்டர் பல்கலைக்கழக மருத்துவமனை அறுவை சிகிச்சை இயக்குநர் பௌலோ செர்ரானோ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“சில பணச்சுருள்கள் பெருங்குடலுக்கு செல்கின்ற குடலில் இருந்து கண்டெடுக்கப்பட்டன”.
அவர் 100 டாலர் பணநோட்டுச் சுருள்களை சாப்பிட்டிருந்தார்.

சட்டவிரோதமாக கொண்டு செலவதற்கான எந்த வடிவத்திலும் அவை பொதியப்பட்டிருக்கவில்லை” என்று அவர் மேலும் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஜினியுடனான சந்திப்பில் அரசியல் இல்லை: நக்மா..!!
Next post தேவசேனாவாக நடித்ததில் மிகப்பெரிய சவால் எது? (வீடியோ)