தங்க நகை பாதுகாப்பும்.. பராமரிப்பும்..!!

Read Time:5 Minute, 23 Second

201705041019137995_gold-jewelry._L_styvpfவிலை மதிப்புமிக்க தங்க நகைகளை நாம் வாங்கி பயன்படுத்தி வருகிறோம். வாங்கும்போது அதிக கவனத்துடன் பார்த்து வாங்கும் நாம் நகைகளை வாங்கிய பின் அதனை பாதுகாப்பதிலும், பராமரிப்பதிலும் கோட்டை விடுகிறோம். இதன் காரணமாய் நகைகள் மிக விரைவாக சேதம் அடைவது, நகையின் பொலிவு குறைவு ஏற்படுதல், வாங்கிய கொஞ்ச நாளில் பழைய நகை போன்று தோற்றமளிப்பது போன்றவை ஏற்படுகிறது. எனவே தங்க நகைகளை வாங்குவதில் இருக்கும் ஆர்வம் அந்த பராமரிப்பதிலும், பாதுகாப்பதிலும் தொடர்ந்து இருந்திடல் வேண்டும்.

தங்க நகைகள் அதிக நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்டவை. அவற்றின் இடுக்குகள், விளிம்பு பகுதிகளில் அழுக்குகள் சேர்ந்து விடும். நமது உடலில் வெளிவரும் வியர்வை, தலையில் உள்ள எண்மெய் பிசுக்கு, தினம் நாம் அழகுபடுத்த பயன்படுத்தும் பேசியல் பவுடர், கிரீம் மற்றும் வாசனை திரவியங்கள் போன்றவை நாம் அணியும் நகைகளில் சேர்ந்து விடும். மேலும் நகையை அதற்குரிய பெட்டிகளில் வைத்திடாமல் திறந்தவாறு வைப்பதும் அதில் அழுக்குகள் படிய காரணமாகிறது.

தங்க நகை பாதுகாப்பு அம்சங்கள் :

தங்க நகைகளை எப்போதும் பீரோவில் வைத்து தான் பூட்டுகிறோம். பிறகு அதை விட பெரிய பாதுகாப்பு செய்யணுமா? என்ற கேள்வி எழும். பாதுகாப்பு என்பது தங்க நகைகளை அதன் மதிப்புக்கு ஏற்ப தனி வகையான பாதுகாப்புக்கு உட்படுத்துவது. ஒவ்வொரு நகையும் அதற்குய நகை பெட்டியில் வைத்து பாதுகாப்பதே சிறந்தது. நகைகளை ஒட்டுமொத்தமாய் ஒரே பெட்டியில் குவியலாக வைத்து பாதுகாப்பது கூடாது. ஒரு நகையுடன் இன்னொரு நகையின் மீது உராயாமல் தனித்தனியே வைத்திட வேண்டும். அதற்குரிய பெட்டியில் வெள்ளை பருத்தி துணி மூடி பாதுகாப்பது அவசியம்.

* கல் வைத்த நகைகள் மற்றும் எனாமல் பூசிய நகைகள் என்றாலும் மெல்லிய துணி மூடி பாதுகாப்பது அதன் பொலிவு குறையாமல் பாதுகாக்க வழியாக இருக்கும்.

* நகைகளை அணிந்து சென்று வந்த பிறகு மறுபடியும் பெட்டியில் வைக்கும் முன் நன்றாக வெள்ளை துணியில் துடைத்து வைக்கவும்.

* காதணிகளின் திருகாணி, தண்டு பகுதிகள் எண்ணெய் பிசுக்குடன் இருக்கும். உடனே துடைத்து விட்டால் அழுக்கு சேராது.

* நகைகளுக்கென பிரத்யோக பாதுகாப்பு வழிமுறை குறிப்பிடப்பட்டபடி செயல்பட வேண்டும்.

தங்க நகைகளை தூய்மை செய்யும் முறை :

தங்க நகைகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் திறம்பட தூய்மை செய்திடல் வேண்டும். பொதுவாக நாம் குளிக்கும்போது, தூய்மை பணிகளில் ஈடுபடும்போது நகைகளை கழற்றி வைத்து விட்டு அப்பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் சோப்பு மற்றும் கிளனர்களில் உள்ள இராசாயனங்கள் தினம் படும்போது நகையின் பொலிவை குறையைச் செய்வதுடன் தேய்மானம் ஏற்படவும் செய்யவும்.

அதிக அழுக்கு சேர்ந்து பொலிவு குறைவான நகையை மட்டும் தூய்மை செய்திடல் வேண்டும்.

சில நகை கடைகள் நகையை அம்மோனியா கலந்த நீரில் ஊற வைத்து கழுவ அனுமதி வழங்கும். சில நகைகடைகள் அம்மோனியா நீரில் கழுவுதல் கூடாது என தெரிவிக்கும்.

எதுவாயினும் மென்மையான பாத்திர டிடர்ஜென்ட் தண்ணீரில் கலந்து அதில் நகைகளை ஊற வைக்க வேண்டும்.

மெல்லிய சாப்ட் பிரஷ் கொண்டு ஊறிய நகைகளை மெதுவாக தேயத்து கழுவி விட நகைகள் அழுக்கு நீக்கி பளிச்சிடும்.

அதுபோல் வணிக ரீதியிலான நகை கழும் கிளனர்கள் கிடைக்கின்றன. அதனை வாங்கி அதில் குறிப்பிட்டுள்ளபடி, கழுவுதல் வேண்டும்.

கல் வைத்த மற்றும் இதர உலோக நகைகள் எனில், நகை கடையில் கொடுத்து சுத்தம் செய்து கொள்வது நல்லது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அந்த விஷயத்தில் ஆர்வம் இருந்தா மட்டும் போதுமா?… வயாகரா பத்தி உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா?..!!
Next post உயிரோடு சமாதி கட்டும் வினோத போராட்டம்: அரசு டாக்டர்கள் நடத்தினர்..!!