இது பெண்களுக்கான குறிப்புகள்: மிஸ் பண்ணிடாதீங்க..!!

Read Time:2 Minute, 35 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70அன்றாடம் வீட்டில் செய்யக் கூடிய வேலைகள் சுலபமாக இருப்பதற்கு, பெண்களுக்கு மிகவும் உபயோகமான எளிய வீட்டுக் குறிப்புகள் இதோ!

பெண்களுக்கான எளிய வீட்டுக் குறிப்புகள்

வாடிய கேரட் மற்றும் பீட்ரூட்டை உப்பு கலந்த நீரில் சிறிது நேரம் போட்டு எடுத்தால், அது ப்ரெஷ்ஷாக இருக்கும்.
எலுமிச்சை மூடியில் உப்பு தேய்த்து, ஒரு நிமிடம் வைத்திருந்து பிழிந்தால், அதன் சாறு நன்றாக வரும். ஜூஸ் போட பயன்படுத்தும் போது சர்க்கரை தடவி பிழியலாம்.

வாழைப்பழம் நிறம் மாறாமல் இருக்க, அதை லேசான வாயில் துணியில் சுற்றி வைக்க வேண்டும்.
வெங்காயத்தை நறுக்கி, பல்லி வரும் இடங்களில் வைத்தால், வெங்காய வாசத்திற்கு, பல்லி ஓடிவிடும்.

இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை ஒரு மணி நேரம் ஊறவைத்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வேப்பிலை சேர்த்து அரைத்து தலைக்கு தடவி, 1/2 மணி நேரம் ஊறவைத்து, தலை குளித்தால், பொடுகு, பேன் தொல்லைகள் இருக்காது.

சமையல் அறையை சுத்தம் செய்யும் போது, சிறிதளவு தேங்காய் எண்ணெயை பனியன் துணியில் நனைத்து துடைத்தால், சமையல் அறை பளபளப்பாக இருக்கும்.

தோசைக் கல்லில் தோசை நன்றாக வரவில்லை என்றால் ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி, தோசைக் கல்லில் தேய்த்து விட்டு, தோசை ஊற்ற வேண்டும்.

சில்வர் பாத்திரத்தில் குடிநீர் எப்போதும் குளிர்ச்சியாக இருக்க, ஒரு ஈரத்துணியை தண்ணீர் பாத்திரத்தின் மேல் சுற்றி வைத்தால், தண்ணீர் ஜில்லென்று இருக்கும்.

வடகம் பிழியும் போது, பிளாஸ்டிக் ஷீட்டை தவிர்த்து, ஒரு வெள்ளை துணியில் பிழிந்து, அது காய்ந்ததும் அதன் மேல் லேசாக தண்ணீர் தெளித்து, 5 நிமிடம் கழித்து எடுக்க வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவுக்கு பின் ஆண்கள் செய்யும் சில விசித்திரமான செயல்கள்..!!!
Next post புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உருக்கமான பேஸ்புக் பதிவு: குவிந்த 33,000 ஆறுதல் கடிதங்கள்..!! (வீடியோ)