உடலுறவு கொள்ளும் போது பெண்களை பாதுகாப்பாக உணர வைக்க..!!

Read Time:4 Minute, 13 Second

13-1444733713-menhatethesebedroomblundersசிங்கம், புலியிலிருந்து, காக்கை, குருவி வரைக்கும் இனப்பெருக்கம் செய்ய வேண்டிய கட்டாயம் அல்லது காலம் வரும் போது தான் உடலுறவில் ஈடுப்படுகின்றன. ஆனால், ஆறாம் அறிவு கொண்ட ஒரே காரணத்தினால் தான் மனிதன் மட்டும் தான் விரும்பும் போதெல்லாம் உடலுறவில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறான்.

பெரும்பாலும் பெண்களுக்கு உடலுறவில் ஈடுபட ஆசை இருக்கும் அதே அளவிற்கு பயமும் இருக்கும். இதற்கு அவர்களது உடல் கூறு தான் காரணம். மாதாமாதம் பெரும் வலியை கடந்து வரும் அவர்களுக்கு முதல் முறை உடலுறவில் ஈடுபடும் போதும், வலி அதிகம் இருக்குமோ என்ற அச்சம் இருக்கும்.

இந்த பயத்தில் இருந்து அவர்களை வெளிக்கொண்டு வருவது அவசியமானது….

கமல் யுக்தி காதல் மன்னனாகவும் இருக்க வேண்டும், புன்னகை மன்னனாகாவும் இருக்க வேண்டும். அதாவது, காதலும் வேண்டும். அதே சமயம் அவர்களை மகிழ்வித்து, உங்களோடு நெருக்கம் கொள்ள புன்னகை மன்னனாகவும் இருக்க வேண்டும். “நான் ரொம்ப ஸ்ட்ரிக்ட்” என்று முறுக்கு கம்பி போல இருத்தல் கூடாது ஆண்மகன்களே!!!

எடுத்தவுடன் ஆரம்பிக்க வேண்டாம் பேச்சில் தொடங்கும் போது கூட எடுத்ததவுடன், உடலுறவு சார்ந்து பேச வேண்டாம். சாதாரணமாக பேசி ஆரம்பியிங்கள். பெண்களுக்கே உடலுறவுக் குறித்து தெரிந்தாலும், அதை பற்றி மென்மையான வார்த்தைகள் கொண்டு பேச வேண்டியது அவசியம்.

அவசரம் காட்ட வேண்டாம் திருமணம் ஆன முதல் நாளே, உடலுறவில் அவசரம் காட்ட வேண்டாம். பெண்கள் கொஞ்சம் இதில் நேர அவகாசம் எதிர்பார்பார்கள்.

புதிய இடம் என்பதால் தயக்கம் இருக்கும் ஆண்களை போல புதிய இடத்தில் சீக்கிரம் பெண்கள் தங்களை பொருத்திக் கொள்ளமாட்டார்கள். புது இடம் என்பதால் சாப்பிடவே சங்கோஜம் அடையும் அவர்கள். தொடக்கத்தில் உடலுறவுக் கொள்வதிலும் தயங்குவார்கள். எனவே அவர்களது தயக்கத்தை முதலில் போக்குங்கள்.

ஆங்கிலப்பட ரீதியில் எதிர்பார்க்க வேண்டாம் ஏற்கனவே தயக்கத்திலும், பயத்திலும் இருக்கும் பெண்களிடம், எடுத்த எடுப்பில் உங்களது முழு திறமையும் காட்ட வேண்டாம். (அதாவது, கத்துக்கிட்டீங்க’ன்னு மொத்த வித்தையும் இறக்காதீங்க மக்களே!!!)

வற்புறுத்துதல் சில ஆண்கள், முதல் முறையிலேயே பலமுறை உடலுறவுக் கொள்ளவும், சில பல பலான முத்தங்களும் எதிர்பார்ப்பார்கள். முதல் முறையில் இவ்வாறு அடம் பிடிப்பது தவறு. இது, உங்கள் மீது தவறான கண்ணோட்டத்தை உருவாக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது

முதலில் அவர்களை பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள் முதலில் உங்களது மனைவியின் மனநிலை எந்த அளவில் இருக்கிறது. உடலுறவு சார்ந்து அவர் எந்த பக்குவத்தில் இருக்கிறார். அவரிடம் எந்த நிலையில் இருந்து நீங்கள் ஆரம்பிக்க வேண்டும் என்பதை பேசி அறிந்துக் கொள்ள வேண்டியது அவசியம். இது எதார்த்தமாக இருக்க வேண்டுமே தவிர, நேரடியாக அல்லது செயற்கைத்தனமாக இருக்க கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இதற்குப் பெயர் மசாஜா? இளம் பெண்கள், எச்சரிக்கையாக – கவனமாக இருந்து கொள்வது நல்லதோ?..!! அதிர்ச்சி வீடியோ
Next post 2 மணிநேரத்தில் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கலாம்.. இதை ட்ரை பண்ணுங்க..!!