இயற்கை முறையில் வெப்பத்தை தணிக்கலாம்..!!

Read Time:2 Minute, 25 Second

201705020824574607_summer-heat-control-health-tips_SECVPFவெயில் காலத்தில் உடலின் நீர் அளவு குறைவதால்தான் தாகம், மயக்கம், நீர்க்கடுப்பு என்று ஏகப்பட்ட சங்கடங்கள் வருகின்றன. அதைத் தவிர்க்க சாதாரண நாட்களைக் காட்டிலும், அதிக அளவில் நீர் அருந்தினாலே போதும். வெறும் தண்ணீராக மட்டும் குடிக்காமல், இயற்கையிலேயே குளிர்ச்சியான பொருட்களைக் கலந்து பருகினால், வெயிலின் பாச்சா உங்களிடம் பலிக்காது. தமிழர்கள் மருத்துவத்தில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பல்வேறு குறிப்புகள் இருக்கின்றன.

தண்ணீர்ப் பானையில் வெட்டி வேர், எலுமிச்சை வேரைப் போட்டு வைத்தால், நல்ல குளிர்ச்சியும் வாசனையும் கிடைக்கும். வெந்தயத்தை வறுத்து ஆறிய பிறகு, தண்ணீரில் போட்டுப் பருகினால், வெயிலால் உடலுக்கு உள்ளேயும் வெளியேயும் உண்டாகும் புண்கள் குணமடையும்.

நன்னாரி உண்டால், பொன்னாகும் மேனின்னு சொல்வாங்க. நன்னாரியின் நடுவில் இருக்கிற தண்டை நீக்கிவிட்டு, சிறு வேர் போல இருக்கும் பட்டையைத் தண்ணீரில் போட்டு வைத்துக் குடித்தால், உடல் குளிர்ச்சியாக இருக்கும். எலுமிச்சம் பழத்தில் விரல் அளவுக்குத் துளையிட்டு, தண்ணீர் பானைக்குள் போட்டு வைத்துப் பருகினால் குளிர்ச்சிக்கு குறைவு இருக்காது.

வெயில் காலத்தில் ஏற்படும் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சினைகளுக்குத் தண்ணீரோடு துளசி அல்லது அதிமதுரம் சேர்த்துப் பருகலாம். இவற்றின் விலை அதிகபட்சம் 5 ரூபாயாக இருக்கும். உள்ளங்கையிலேயே ஊட்டியும், கொடைக்கானலும் இருக்கும்போது எந்த வெயிலையும் சமாளிக்கலாம் தானே.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அதிர்ச்சி வீடியோ! கல்யாண மேடையில் இளம்பெண்கள் குத்தாட்டம்! கவர்ச்சி நடனம்..!! (வீடியோ)
Next post பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியின் ஆடையை களைந்து விசாரணை நடத்திய பொலிஸ்..!!