ஒவ்வொரு ஆண்டும் 14,000 பெண்கள் கற்பழிப்பு: எந்த நாட்டில் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 55 Second

625.500.560.350.160.300.053.800.748.160.70மெக்சிகோ நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 பெண்கள் கற்பழிக்கப்படுவதாக சர்வதேச மன்னிப்பு சபையான அம்னாஸ்ட்டி வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான மெக்சிகோவில் நிகழ்ந்து வரும் மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த அம்னாஸ்ட்டி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது 20 சதவிகித கற்பழிப்பு புகார்கள் மட்டுமே என்றும், புகார் தெரிவிக்காத 80 சதவிகித கற்பழிப்பு சம்பவங்களை கணக்கிட்டால் 30,000க்கும் அதிகமாகும் என்ற அதிர்ச்சி தகவலையும் அம்னாஸ்ட்டி தெரிவித்துள்ளது.

மெக்சிகோ நாட்டில் கடத்தல் மற்றும் கொள்ளை, கொலை சம்பவங்கள் அதிகளவில் நிகழ்வதால் மனித உரிமை ஆணையத்தின் கடும் கண்டனத்திற்கு மெக்சிகோ அரசு உள்ளாகி வருகிறது.

மேலும், ஜனாதிபதியான Enrique Pena Nieto என்பவர் பெண்களுக்கு எதிரான கொடுமைகளை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என மெக்சிகோ பெண்கள் நல அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெரிய போராட்டத்தை சந்தித்து நடிகை ஆனேன்: ஸ்வேதா கய்..!!
Next post உதயநிதி பட இயக்குனருக்கு ஓமன் நாட்டு மந்திரி பாராட்டு..!!