நோய் எதிர்ப்பு சக்தி தரும் நெல்லிக்காய்..!!

Read Time:3 Minute, 10 Second

201704201436000176_Gooseberry-gives-immunity_SECVPFஒளவையார் காலத்தில் இருந்து இந்த நெல்லிக்காய்க்கு தனி மரியாதைதான். விஞ்ஞானம் மூலம் கண்டறிவதற்கு முன்பே பல உண்மைகளை நம் முன்னோர் என்றோ நெல்லிக்காயினைப் பற்றி அறிந்து வைத்துள்ளனர். இன்று மருத்துவ விஞ்ஞானம் நெல்லிக்காயில் அதிக வைட்டமின் ‘சி’ சத்து இருப்பதனை அறிந்து நெல்லிக்காயினை இந்தியாவின் பொக்கிஷமாகக் கூறுகின்றது.

* மிக அதிக வைட்டமின் ‘சி’ சத்து, இருப்பதால் நன்றாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது.

* அன்றாடம் அல்லது அடிக்கடி நெல்லிக்காய் பயன்படுத்துபவர்களுக்கு காலப்போக்கில் மிக நல்ல ஆரோக்கியத்தினையும், நோய் எதிர்ப்பு சக்தியினையும் அளிக்கின்றது.

* திசுக்களின் அழிவினை தடுப்பதால் வயது கூடாத இளமை தோற்றம் பெறுகின்றனர்.

* புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கின்றது.

* நெல்லிக்காய் அசிடிடி (நெஞ்செரிச்சல்) வயிறு வீக்கம் இவற்றினை தவிர்க்கும்.

* கல்லீரலில் உள்ள நச்சுக்களை நீக்கி கல்லீரலை ஆரோக்கியமாக வைக்கும்.

* சிறுநீரக நச்சுக்களை நீக்கும்.

* தொண்டை கிருமி பாதிப்பினை தவிர்க்கின்றது.

* எலும்பு ஆரோக்கியம் காக்கப்படுகின்றது.

* அலர்ஜி, ஆஸ்துமா, தொடர் இருமல், சுவாசக் குழாய் வீக்கம் இவற்றிலிருந்து காக்கின்றது.

* நரம்புகளுக்கு வலுவூட்டி பக்க வாத நோயிலிருந்து காக்கின்றது.

* தூக்கமின்மை, மன உளைச்சல் நீக்குகின்றது.

* ஞாபக சக்தி கூடுகின்றது.

* கெட்ட கொழுப்பினை நீக்குகின்றது.

* இருதய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றது.

* இருதய சதைகள் வலுப்பெறுகின்றன.

* சர்க்கரை அளவு ரத்தத்தில் சீராய் இருக்க உதவுகின்றது.

* சர்க்கரை நோயினால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்கின்றது.

* மாவுச் சத்து செரிமானத்திற்கு உதவுகின்றது.

* பித்த நீர் பையில் கற்கள் உருவாகாமல் தடுக்கின்றது.

* செரிமான சக்தியினை கூட்டுகின்றது.

* உடல் தளர்ச்சி அடையாது இருப்பதால் இளமை நிலைக்கின்றது.

* சருமத்தில் தடவ கரும்புள்ளி, திட்டுகள் நீங்குகின்றது.

* தலைமுடியில் தடவ முடி வலுபெறும்.

* ரத்த சிவப்பணுக்கள் கூடுகின்றது.

* கண் கோளாறுகளைத் தவிர்க்கின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடுவானில் தீப்பிடித்த விமான என்ஜின்: கதறி அழுத பயணிகள்..!! (வீடியோ)
Next post சிலம்பாட்டத்தில் கைதேர்ந்த சமந்தா – வீடியோ இணைப்பு..!!