இச்சை மற்றும் பேராசை எண்ணங்களில் இருந்து வெளிவருவது எப்படி?..!!
மனிதர் மனதை பாழாக்கி, கேடு விளைவிக்கும் இச்சை மற்றும் பேராசை எண்ணங்களில் இருந்து எப்படி வெளிவருவது என்பது பற்றி இங்கு கூறப்பட்டுள்ளது.
இச்சை எண்ணங்கள் எழாமல் ஒருவர் வாழ்ந்திட முடியுமா? என்ற கேள்விக்கு 99% முடியாது என்ற பதில் தான் கிடைக்கும். இச்சை என்பது அனைவர்க்கும் எழக்கூடிய ஒரு எண்ணம் தான். ஆனால், நாம் அதை கட்டுப்படுத்துகிறோமா? அல்ல அந்த எண்ணம் நம்மை கட்டுப்படுத்தி வைத்திருக்கிறதா? என்பது தான் முக்கியமான கேள்வி. இச்சை என்னத்திற்கு கட்டுப்பட்டு, வெளிவர முடியாமல் தவிர்க்கும் நபர்கள், அதிலிருந்து எப்படி வெளிவருவது என இங்கு காணலாம்…
ஏதாவதொரு வேலை! இடைவிடாமல் உழைக்கும் வகையில் ஒரு வேலையை தேர்வு செய்யுங்கள்.அதில் அடுத்தடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளுடன் முனைப்புடன் செயலாற்றுங்கள். உங்கள் எண்ணம், ஆசை போன்றவை அதில் ஆழ்ந்து பயணிக்கும்படி செய்யுங்கள்.
ஆக்கப்பூர்வமான செயல்! எழுதுதல், இசை, நடனம், ஓவியம், என கலை சார்ந்து, ஆக்கப்பூர்வமான செயல்களில் நீங்கள் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் போது மனதில் எழும் தீய எண்ணங்களும், இச்சை எண்ணங்களும் பொசுங்கிவிடும். இதை நீங்கள் தீவிரமாக பின்பற்றும் போது நன்கு காணலாம்.
இரவு வரை… பகலில் நீங்கள் நன்கு உழைத்தால், இரவில் நல்ல உறக்கமும், மன நிம்மதியும் தான் கிடைக்குமே தவிர இச்சை எண்ணங்களோ, பேராசைகளோ உங்களை சூழாது, தொந்தரவும் செய்யாது. எனவே, பகல் நேரத்தில் உங்கள் வேலையில் மட்டுமே எண்ணத்தையும், கவனத்தையும் செலுத்துங்கள்.
20 முதல் 25 வரை… இச்சை எண்ணங்களும், பேராசை குணங்களும் அதிகம் தோன்றுவதே இந்த 20 முதல் 25 வரையிலான இடைப்பட்ட வயதில் தான். எனவே, இந்த வயதில் நீங்கள் இந்த இச்சை எண்ணங்களை சரியாக கடந்து வந்துவிட்டாலே உங்கள் மனது தூய்மையாகவும், தெளிவாகவும் அமையும்.
ஹார்மோன்! மேலும், குறிப்பாக, பதின் வயதில் ஆரம்பித்து இருபதுகளின் இறுதி வரை ஹார்மோன்கள் உங்களை தொந்திரவு செய்யும். நீங்களாகவே வேலைகளை எடுத்துக்கொண்டு இடைவிடாது உழைத்துக் கொண்டே இருங்கள். எண்ணத்தை திசைத்திருப்புவதை காட்டிலும், இதிலிருந்து வெளிவர சிறந்த வழி வேறேதும் இல்லை.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating