செக்ஸ் உறவால் அனுபவித்த கொடுமைகள்: ஒரு பெண்ணின் உண்மை கதை…!!
பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்ட முன்ரோ பெர்க்டார்ஃப், தான் எவ்வாறு பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதையும், அதைத் தொடர்ந்து ஏற்பட்ட துயரங்கள் என்ன என்பதையும், அதிலிருந்து மீண்டு வந்தது என்பது பற்றியும் முன்ரோ பெர்க்டோர்ஃப், என்ற பெண், பிபிசியிடம் தனது உண்மை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
தான் உடல் அளவில் மட்டுமல்ல, மனதளவிலும் பெரிய துன்பங்களை அனுபவித்தாலும், என்னைப் போன்ற எத்தனையோ பெண்களுக்கு பயன்படும் என்பதால்தான் அதைப் பகிர்ந்து கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
பாலியல் வல்லுறவிற்கு ஆளான பலரைப் போல் நானும் எனக்கு தெரிந்த நபரால் பாலியல் வல்லுறவிற்கு ஆளானேன். அந்த நபரை நான் ஒரு நாள் இரவு சந்தித்துள்ளேன்.
சில நாட்களுக்கு பிறகு அதிக கொகைன் உட்கொண்ட நிலையில் காலை ஐந்து மணிக்கு எனது வீட்டின் கதவை தட்டினான். என்னை கட்டிலில் தள்ளினான். நான் கத்தினேன். ஆனால் அவன் என்னைக் கொன்று விடுவேன் என்று மிரட்டினான்.
பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் பொதுவாக ஏன் திரும்ப எதுவும் செய்யவில்லை என கேள்வி கேட்பார்கள், அதற்கு பல பதில்கள் இருக்கும். என்னுடைய பதில், பொதுவான ஒன்றுதான்.
நான் திரும்ப எதாவது செய்வது மிகவும் ஆபத்தானதாக இருந்தது. அவனை நான் உண்டியல் வைத்து தாக்க முயன்றேன். ஆனால் அவன் என்னை விட இரண்டு மடங்கு வலவாக, பலசாலியாக இருந்தான். நாம் சண்டையிட்டு அதில் தோல்வியடைந்தால் அது மிகவும் மோசமான சூழலை உருவாக்கிவிடும் என்று எனக்கு தெரிருந்திருந்தது.
நான் அவனிடம் இரண்டு மணி நேரம் சிக்கிக் கொண்டேன். இறுதியில் அவனுக்கு சம்மதம் தெரிவித்த மாதிரி நான் நடித்து, எனக்கு உடுத்திக் கொள்ள ஆடை வேண்டுமென்று கேட்டேன். அதில் அவனின் கவனம், மறுபக்கம் திரும்பிய போது நான் தப்பித்துவிட்டேன். அவன் எனது அலைபேசியை எடுத்துக் கொண்டு போய்விட்டான். எனவே அவனது தொலைபேசி எண்ணும் என்னிடம் இல்லை.
இது குறித்து புகார் தெரிவிக்க நான் அஞ்சினேன். ஆனால் பிற பெண்களை இதிலிருந்து காப்பாற்ற வேண்டும் என முடிவெடுத்து இதுபற்றி புகார் தெரிவித்தேன்.
துரதிர்ஷ்டவசமாக எனது பயம் சரியானதாக இருந்தது. நான் அளித்த புகார் தொடர்பாக எனக்கு நடத்தப்பட்ட உடல் பரிசோதனை, தாக்குதலை விடக் கொடுமையாக இருந்தது.
நான் ஒரு திருநங்கை; எனது உடல் மாறுவதற்கான ஆரம்ப கட்டத்தில் நான் இருந்தேன். எனது மார்பகங்கள் மிக சிறியதாக இருந்தன. மேலும் அதுதான் எனது கால்களில் உள்ள ரோமங்களை அகற்றத் தொடங்கிய சமயம்; எனவே எனது தோல் சமமாக இல்லை.
அது ஒரு விடியற்காலை பொழுது. மேலும் என்னை பற்றிய அவதூறுகளை அவர்கள் உருவாக்குவதாக நான் உணர்ந்தேன்.
நான் அந்த இரவு வெளியே செல்லவில்லை; நான் வீட்டை விட்டு கூட வெளியே வரவில்லை. என்னை குற்றம் சொல்ல காரணம் எதுவும் இல்லை என்பதை அவர்களுக்கு நான் எவ்வாறு சொல்வேன்.
என்னை விசாரித்த போது என்னைப் பற்றிய பலதரப்பட்ட எண்ணங்களை அவர்கள் வளர்த்துக் கொண்டனர். ஆகையால் என்னால் முழுவதுமாக அவர்களிடம் எதுவும் கூற முடியவில்லை. மேலும் என்னைத் தாக்கியவர் என்னுடன் ஒரு நாள் பாலுறவு கொள்ள வந்தவர் என்பதை நான் அவர்களிடம் கூற விரும்பவில்லை.
அந்த வழக்கில் குற்றவாளியைக் கண்டுபிடிக்க என்னால் முடிந்தவரை முயன்றேன். ஆனால் அவர்கள் அவனைக் கண்டுபிடிக்கவில்லை.
எனது வீட்டில் டி என் ஏ சோதனை நடத்தப்பட்டபோது, உடன் தங்கியிருந்தவர்கள் மற்றும் எனது நண்பர்களைத் தவிர யாருக்கும் இதைப்பற்றி நான் தெரிவிக்கவில்லை. நான் எதுவும் நடக்காத மாதிரி நடிக்க விரும்பினேன். நான் அப்போது இளம் வயது பெண். பாலுறவு வைத்து கொள்ள விரும்பினால் அதற்காக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக வேண்டும் என்பதில்லை. எனது இந்த நிலைக்கு நானே காரணம் என நான் என்னை சமாதானம் செய்து கொண்டேன். எனவே அதற்கான அவமானத்தை நான் நீண்ட நாட்கள் மனதில் வைத்திருந்தேன்.
அது என்னை மிகவும் துன்புறுத்தியது. சில நேரங்களில் எனது அந்த அனுபவம் எனது வாழ்க்கையின் மொத்த செயலையும் பாதித்தது. நான் எப்படி என்னைப் பார்க்கிறேன், பிறரின் மீது வைக்கும் நம்பிக்கை, பாலியல் ரீதியாக எனது கணவருடன் என்னால் எவ்வாறு நடந்து கொள்ள முடியும். மேலும் எனது காயத்திலிருந்து வெளியே வர முயன்றேன்.
இதே மாதிரி சூழ்நிலையை எதிர்கொண்ட எனது நண்பர்களை நான் தேடத் தொடங்கினேன் மேலும் அவர்களிடம் மனம் விட்டு பேசுவதால் எனக்கு மன அமைதி கிடைத்தது. இம்மாதிரியான சூழ்நிலையை எதிர்கொள்வது எவ்வாறு என்ற தந்திரங்களை பகிர்ந்து கொண்டோம்.
அவர்களிடம் அதுபற்றி பேசுவது எனக்கு ஆறுதலாக இருந்தது; அவர்கள் எனது சூழ்நிலை குறித்து பேச என்னை ஊக்குவித்தனர். நான் எனது பிரச்சனைகளிடமிருந்து தப்பித்து ஓடினால் அது மேலும் என்னை துன்புறுத்தும் என அவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும் இது பற்றி பேச எனக்கு கவலையாக இருந்தது. என்னை தவறாகவும், பாதிக்கப்பட்டவளாகவும், அஜாக்கிரதையானவளாகவும் காண எனக்கு விருப்பம் இல்லை. எனக்கு தெரியும் நான் இங்குள்ள பலரை விட அஜாக்கிரதையானவள் இல்லை என்று.
சமீப நாட்களில் எனது அனுபவத்தை பற்றி நான் அதிகமாக பேசுகிறேன்.
இதை பற்றி நான் பேச ஆரம்பித்த பிறகு என்னுடைய பல நண்பர்கள் தாங்கள் அனுபவித்த பாலியல் வன்முறைகளை என்னுடன் பகிர்ந்து கொண்டனர். நான் அவர்கள் குறித்து பெரிதாக கவலையடைந்தேன். ஆனால் ஒரு வழியில் நான் மட்டும் தனியாக இம்மாதிரியான சூழ்நிலையில் இல்லை, என்னை போன்று பலர் உள்ளனர் என்பதை அறிந்து ஆறுதல் அடைந்தேன்.
பாலியல் வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களை இந்த சமூகம் சரியாக நடத்தவில்லை என்பதை நான் உணர்ந்து கொண்டேன்.
சமூகத்தை கருத்தில் கொண்டு நாம் அனைவரும் அமைதியாக இருந்து விடுகிறோம்.
ஒருவருக்கு ஒருவர் ஆதரவு அளிக்க வேண்டிய சூழலில் நாம் ஆதரவு அளிக்க தவறுகிறோம்.
பாலுறவு கொள்வதும், பாலியல் வல்லுறவிற்கு ஆளாவது குறித்த அச்சம் இல்லாமல் எந்தவித தயக்கமும் இன்றி நாம் விரும்பும் நபருடன் பாலுறவு கொள்வதை பற்றியும், சமூகத்தில் அனைவரும் புரிந்து கொள்ளும் வரை நாம் இதை பற்றி தொடர்ந்து பேச வேண்டும்.
அவ்வாறு பாலியல் வல்லுறவு செய்யப்படுவது பாலுறவு கொள்வதாக அர்த்தம் இல்லை. அது அதிகார துஷ்பிரயோகம் போன்றது. மேலும் நீங்கள் புர்கா அணிந்திருந்தாலும். குட்டை பாவாடை அணிந்திருந்தாலும், சட்டை அல்லது சுடிதார் என எதை அணிருந்தாலும் அது பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதற்கான காரணமாக இருக்க கூடாது.
எனது காயத்திலிருந்து வெளி வர நான் முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எனது செய்கையில் தவறில்லை என்று பிறருக்கு புரியவைக்க நான் முயற்சிப்பேன். ஆனால் சில நேரங்களில் என் மீதே நான் குற்றம் சுமத்தி கொள்வேன்.
என்னை நானே திட்டியும் கொள்வேன். ஆனால் இந்த நிகழ்வு குறித்துப் பேசுவது எனக்கு மிகுந்த தன்னம்பிக்கையை தந்தது; உண்மையில் என்மீது குற்றமும் இல்லை.
வினோதமாக சொல்ல வேண்டும் என்றால் சமீப வருடங்களாக நான் பாலுறவு கொள்வது எனக்கு உதவி புரிகிறது.
பாலுறவு கொள்வதை பாலியல் வல்லுறவுடன் தொடர்பு படுத்தாமல், என்னை நானே குறை சொல்லாமல், இது எனது சுதந்திரத்தின் அடையாளமாகக் கருதி மகிழ்ச்சியடைகிறேன்.
Average Rating