சீனாவில் பாகங்களை வாங்கி குறைந்த விலையில் ஐபோன் தயாரித்த ஸ்காட் ஆலென்..!! (வீடியோ)

Read Time:2 Minute, 20 Second

hq720அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் பொறியியலாளராகவுள்ள ஸ்காட் ஆலென் என்பவர் சீனாவில் தங்கியிருந்து தனக்கென பிரத்தியேகமாக ஒரு ஐபோனை உருவாக்கியுள்ளார்.

சீனாவின் சென்சென் பகுதியில் தங்கயிருந்த ஆலென், ஹூகுயாங்பெய் சந்தைகளில் கிடைக்கும் ஐபோனின் உதிரிப் பாகங்களை தனித்தனியே வாங்கி புதிய ஐபோனை உருவாக்கிக்கொண்டுள்ளார்.

சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஸ்காட், உணவகமொன்றில் யாரோ வழங்கிய யோசனையைத் தொடர்ந்து, தனக்கென தானே ஒரு ஐபோனை உருவாக்கத் தீர்மானித்துள்ளார்.

ஏற்கனவே இவர் ஐபோன் 6S ஸ்மார்ட்ஃபோனினைப் பயன்படுத்தி வந்த நிலையில், மற்றுமொரு ஐபோன் 6S ஸ்மார்ட்ஃபோனை உருவாக்க முடிவெடுத்தார்.

ஐபோனைத் தயாரிக்க திரை, ஷெல், பேட்டரி மற்றும் லாஜிக் போர்ட் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தினார். முதலில் உடைந்த திரையை வாங்கி அதனை புதிய பாகங்களுடன் சரி செய்தார். லாஜிக் போர்டினை முழுமையாகத் தயாரிக்க முடியாது என்பதால் இதனை முழுமையாக வாங்கி விட்டார்.

இத்துடன், பேட்டரியை வாங்குவது எளிமையாகவும் விலை குறைவாகவும் இருந்ததால் 5 டொலர்கள் கொடுத்து அதனை வாங்கியிருக்கிறார்.

தனக்கான ஐபோனை தயாரிக்க பல்வேறு கடைகளுக்கும் செல்போன் சரி செய்யும் இடங்களுக்கும் சென்றதாக ஸ்காட் தெரிவித்துள்ளார்.

மேலும், பொறுமையுடன் தனது வீடியோவைப் பார்க்கும் அனைவராலும் புதிய ஐபோனைத் தயாரிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வயிறு வலியென வைத்தியசாலைக்கு சென்ற சிறுமி, குழந்தை பெற்ற பரிதாபம்..!!
Next post அச்சத்தை விதைக்கும் பிரசார உத்தி..!! (கட்டுரை)