தேனி அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த கணவன்..!!

Read Time:1 Minute, 38 Second

201704101603003287_wife-without-being-married-2-husband-near-theni_SECVPFமதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பூதிபுரத்தை சேர்ந்தவர் பூங்கொடி (வயது29). இவருக்கும் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வருசநாடு முறுக்கோடையை சேர்ந்த பெரியமாயி மகன் காசிமாயன் என்பவருக்கும் கடந்த 2009ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

திருமணத்தின்போது 10 பவுன் நகை மற்றும் ஒரு லட்சம் மதிப்பிலான சீர்வரிசைகள் கொடுக்கப்பட்டன. இவர்களுக்கு 2-வதாக ஆண் குழந்தை ஊனமாக பிறந்தது. அன்று முதல் பூங்கொடியை, காசிமாயன் சித்ரவதை செய்துள்ளார்.

மேலும் 10 பவுன் நகை வாங்கி வர வேண்டும் என கூறி தாய் வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

பாண்டிடீஸ்வரி என்ற பெண்ணை 2-வதாக காசிமாயன் திருமணம் செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்ததும் இதனை தட்டிக்கேட்ட பூங்கொடியை கணவர் காசிமாயன், தந்தை பெரியமாயி, தாய் முத்தம்மாள் ஆகியோர் மிரட்டி உள்ளனர்.

இது குறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பூங்கொடி புகார் செய்தார். அதன்பேரில் காசிமாயன் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்தியத்தின் இணக்கமே இல்லறத்தை இனிமையாக்கும்..!!
Next post பச்சிளம் குழந்தையை உயிருடன் அடக்கம் செய்த மர்ம நபர்கள்..!!