வீடியோ: ‘செல்பி’ எடுக்க சச்சின் போட்ட நிபந்தனை..!! (வீடியோ)

Read Time:2 Minute, 15 Second

201704091715297150_Sachin-Tendulkar-gives-road-safety-advice-to-bikers-without_SECVPFஇந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்கள் அடித்து சாதனைப் படைத்த இவர், கிரிக்கெட்டின் கடவுள் என்றும், இந்தியாவின் பிராட்மேன் என்றும் போற்றப்படுகிறார்.

இவரது சேவையை பாராட்டி மத்திய அரசு இவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்துள்ளது. தனது எம்.பி. நிதியில் இரண்டு குக்கிராமங்களை தத்தெடுத்து வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளார்.

உலகளவில் புகழ்பெற்ற சச்சின் தெண்டுல்கர் சமீபத்தில் மும்பையில் தனது காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது கார் ஒரு சிக்னலில் நின்றது. சச்சின் கார் அருகில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் உள்ள இளைஞர் சச்சினை பார்த்து விட்டார்.

உடனே மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி சச்சினுடன் இணைந்து செல்பி எடுக்க ஆசைப்பட்டார். கார் கண்ணாடி அருகே நின்று சச்சினுடன் செல்பி எடுத்துக் கொண்டார்

அப்போது அந்த வாலிபரிடம் ‘‘அடுத்த முறை ஹெல்மெட் அணிந்துதான் வாகனம் ஓட்டுவேன் என்று எனக்கு உறுதி அளிக்க வேண்டும். இது உங்களுக்கு பேராபத்தாக முடியும். உயிர் விலைமதிக்க முடியாதது’’ என்று அறிவுரை வழங்கினார்.

சச்சின் காரில் இருப்பதை கண்ட சில வாகன ஓட்டிகள் கையசைத்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அப்போது அவர்களிடமும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ பதிவை சச்சின் தனது சமூக வலைத்தளத்தில்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஒரே வருடத்தில் பத்து முறை அபார்ஷனா? அதிர்ச்சி தகவல் தரும் பிரபல நடிகை..!!
Next post பாகுபலிபோல் மீண்டும் ஒரு பிரம்மாண்ட படம் எடுக்கமுடியாது: எஸ்.எஸ்.ராஜமௌலி..!!